செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

இன்று புதிதாய் பிறந்தோம்.. (3.2.2021)

இன்று புதிதாய் பிறந்தோம்...

ஏணி இருப்பது மாடிக்கு போகத்தான் ஏணியை பிடித்து தொங்க ஆரம்பித்தால் மாடிக்கு எப்படி போவது?


 அன்புக்குரியவர்களே இன்றைய நாளில் வாசகங்களின் அடிப்படையில் சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

இன்றைய முதல் வாசகமானது இறைவன் நம்மை தண்டித்து திருத்துவது நமது நலனுக்காக என்ற என்று சொல்கிறது.  

பொதுவாகவே நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் உன்னை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் என்று யாராவது சொன்னால் இது வரை நாம் யாருக்கும் தெரியாமல் செய்த எல்லா தப்பும் நம் கண் முன்னாடி வந்து போய்விடும் ....

ஒருவன் இறைவனுக்கு இவ்வாறு ஒரு கவிதை எழுதினான்.

இறைவா நான் பாவம் செய்கிறேன்...
 அப்போதாவது
நீ என்னை கவனிக்க மாட்டாயா? என்ற ஆசையில் .... 

தவறக்கூடிய மனிதன் தவறுகளை சரி செய்து கொள்வதற்கு இறைவன் பல வழிகளில் வழிநடத்துகிறார். 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து தன்னுடைய சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு இருக்கக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். ஆனால் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு மனம் மாறாத அந்த சொந்த ஊர் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் .ஆனால் இயேசு அவர்களைக் கண்டு தன்னுடைய செயலை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக தான் செய்யக் கூடிய நல்ல செயல்களை தொடர்ந்து முன்னின்று செய்து கொண்டே இருந்தார்.

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம் சந்திக்கின்ற நபர்களில் பலர் அடுத்தவரை பற்றிய எதிர்மறையான எண்ணங்களை தங்களுக்குள் விதைத்துக் கொண்டும், அந்த எண்ணங்கள் மட்டுமே உண்மை என எண்ணிக்கொண்டும் சம்பந்தப்பட்ட நபர்களோடு அதுபற்றி கலந்து உரையாடாது,அடுத்தவரை பற்றிய தவறான எண்ணத்தோடு  அடுத்தவர் பெயரை கெடுக்கும் நோக்குடன் செயலாற்றகிறார்கள் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் போலவே ...

பொதுவாகவே நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்று நாம் நினைப்பதை விட, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பதற்குத்தான் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

ஆனால் இயேசுவோ அப்படியல்ல ..தனது சொந்த ஊர் மக்களின் நம்பிக்கைற்றத் தனத்தை கண்டு வியப்புற்றார்.  ஆனால் அவர் தனது பணியினை நிறுத்த வில்லை. மாறாக சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு எல்லாம் சென்று இறையாட்சியை பற்றி கற்பித்து வந்தார் என விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம்.

  இந்த இயேசுவைப்போல அவரின் சீடர்களாகிய நாமும் அடுத்தவரின் அவதூறான வார்த்தைகளை கண்டு அஞ்சாமல். நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம் செய்கின்ற நலமான பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக,விமர்சனங்களை கண்டு அஞ்சாது வீறு நடைபோட்டு இயேசுவின் பாதையில் பயணித்து அவரின் உண்மையான சீடர்கள் நாம் என்பதை நமது செயல்களில் காட்டிட இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதியின் வார்த்தைகளின் அடிப்படையில் இயேசுவோடு இணைந்து பயணிப்போம். 

1 கருத்து:

  1. ஏணியின் குறுக்கே இருக்கும் பலகையை போல நமது வாழ்விலும் பல்வேறு நிகழ்வுகள் நமக்கு குறுக்கே நிற்பது போல தோன்றலாம். அவற்றைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. அவற்றையும் கடந்து நற்செயல்கள் புரிந்திட முன்னோக்கி செல்வோம் என்று, புதிய சிந்தனைகளோடு புதிதாகப் பிறந்திட அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மகிழ்வின் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...