செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

சாம்பல் புதன் - தவக்காலம் ஆரம்பம்

சாம்பல் புதன் - தவக்காலம் ஆரம்பம் 

இது தவக்காலம் , 
ஆண்டுதோறும் தவறாமல் வரும் காலம் . 
செபம் , தவம் , தானதர்மம் , உபவாசம் , ஒப்புரவு , சிலுவைப்பாதை , திருயாத்திரை போன்ற ஆலய அனுசரிப்புகளில் அதிகம் ஆர்வம் காட்டும் காலம் . 
இத்தகு புற மாற்றங்கள் நமக்குள் அக மாற்றத்தையும் அளித்தல் வேண்டும் . 
வெளி ஆடம்பரங்களில் மூழ்கிப் போன நமக்கு ஆலய அனுசரிப்புகளோடு பிறர் நலம் விசாரிப்புகளும் இருக்கட்டும் . 
உண்ணாமல் இருப்பது நோன்பென்றால் பசித்தோருக்கு உணவைப் பகிர்ந்தளிப்பதும் நோன்புதான் . 
சிலுவைப்பாதை செய்வது தவமென்றால் - பிறர் துன்பச் சுமைகளை தாங்கிக் கொள்வதும் தவம் தான்.
கண்ணீர் சிந்தி , இறைவனின் பாடுகளைத் தவக்காலம் தியானிப்பதோடு - பிறர்க்கு எண்ணில்லாக் கருணையைப் பொழிவதும் தியானம் தான் . 
ஒப்புரவு அருட்சாதனம் பெறுவதோடு , பகைவரோடு ஒப்புரவாகிப் போவதும் உண்மைத் தவம்தான் . 
ஊன் உண்ணாமை நன்றுதான் - ஆனால் பிறர்மனம் புண்ணாக்காமல் இருப்பது அதைவிட நன்றல்லவா ! 
செபிப்பது மட்டுமல்ல - தவம் வாழ்வில் திக்கற்றவர்களுக்கு செபிக்க வழிகாட்டுவதும் தவம்தான் . 
அன்று சாக்கு உடையும் , சாம்பலையும் போல் , இன்று காவி உடையும் கழுத்தில் செபமாலையும் அணிவது தவம் என்றால் , உள்ளத்தில் கனிவு , கருணை என்ற ஆடை அணிந்து ஆங்கோர் நலிந்தவைகளைக் கைத்தூக்கி விடுவதும் உண்மைத் தவம் தான் . 
ஏழைகள் மீது அக்கறையின்றி எடுக்கப்படும் எல்லா தவக்கால முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீர்தான் . 
எனவே , இவ்வாண்டு தவக்காலத்திலாவது நாம் எடுக்கும் நோன்புகளும் , நாம் செய்யும் செபங்களும் சிலுவைப்பாதைகளும் அகமாற்றத்தைத் தருவதோடு புறமாற்றத்தையும் , சமுதாய மாற்றத்தையும் தருபவையாக அமையட்டும் . அப்போது அர்த்தமுள்ள தவக் காலத்தில் வாழலாம் . 

2 கருத்துகள்:

  1. பசித்தோருக்கு உணவைப் பகிர்ந்தளிப்பதும் நோன்புதான் .
    சிலுவைப்பாதை செய்வது தவமென்றால் - பிறர் துன்பச் சுமைகளை தாங்கிக் கொள்வதும் தவம் தான்.
    கண்ணீர் சிந்தி , இறைவனின் பாடுகளைத் தவக்காலம் தியானிப்பதோடு - பிறர்க்கு எண்ணில்லாக் கருணையைப் பொழிவதும் தியானம் தான் .
    ஒப்புரவு அருட்சாதனம் பெறுவதோடு , பகைவரோடு ஒப்புரவாகிப் போவதும் உண்மைத் தவம்தான் .
    ஊன் உண்ணாமை நன்றுதான் - ஆனால் பிறர்மனம் புண்ணாக்காமல் இருப்பது அதைவிட நன்றல்லவா !

    எசாயா 58
    3 "நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்;கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்.
    4 இதோ, வழக்காடவும், வீண்சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது.

    5 ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?
    6 கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!
    7 பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...