செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021
நன்மையை எதிர்நோக்கிட....(1.9.2021)
திங்கள், 30 ஆகஸ்ட், 2021
இரவா....? பகலா....?(31.8.2021)
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021
அலட்சியம் செய்யப்படுவது முடங்கி விடுவதற்காக அல்ல...(30.8.2021)
சனி, 28 ஆகஸ்ட், 2021
இறைவார்த்தை செயலாற்றுவது எப்போது? (29.8.2021)
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021
அன்புப் பணியாற்ற...(28.08.2021)
அன்புப் பணியாற்ற...
பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 28 சனி; கிழமை
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று நாம் தாய்த் திருஅவையாக இணைந்து புனித அகுஸ்தினாரை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். புனித அகுஸ்தினார் மிகப்பெரிய இறையியலாளர். ஆனால் இவரது இளமைப் பருவம் என்று பார்க்கின்ற போது, சமூகத்தில் தீயதெனப் படக்கூடிய அனைத்து விதமான தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாக இருந்தவர் அகுஸ்தினார். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை அவர் கேட்டபோது உள்ளத்தில் மாற்றம் அடைந்தவராய் இறைவார்த்தையை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். அன்பே அனைத்திற்கும் ஆணிவேர் என்பதை கண்டு கொண்டவராய், ஆண்டவர் இயேசுவின் மீது அதீத அன்பு கொண்டு, இந்த சமூகத்தில் அன்புப் பணியாற்றத் தொடங்கியவர். அறநெறிக்கு புறம்பாக வாழ்ந்த தன் வாழ்வை மாற்றிக் கொண்டு அறநெறியோடு ஆண்டவரின் வார்த்தைகளை மனதில் இருத்தி, இந்த சமூகத்தில் அன்பை விதைக்கும் மகத்துவமான பணியில் ஈடுபட்டவர் புனித அகுஸ்தினார் அவர்கள்.
இந்த அன்பைக் குறித்தே இன்றைய முதல் வாசகத்தில், பவுல் தெசலோனிக்க நகர மக்களுக்கு கூறுகிறார். கடவுள் நம்மை அன்பு செய்வது போல நாமும் அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் என அனைவருக்கும் அன்பை கற்பிக்கின்றார் புனித பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஒருவர் தன் பணியாளர்களை அழைத்து ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ற வகையில் சில தாலந்துகளை கொடுத்து சில நாள் கழித்து அவற்றை திரும்பக் கேட்கின்றார். கொடுத்ததை இருமடங்காக மாற்றியவரை பாராட்டுகின்றார். ஆனால் கொடுத்ததை அப்படியே புதைத்து வைத்து அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கக் கூடியவரை சாடக் கூடியவராகவும், தண்டிக்கக் கூடிய நபருமாக அவர் இருக்கின்றார்.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இறைவன் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய நம்மை அறிவுறுத்துகின்றார். அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு இந்த சமூகத்தில் அனைவரையும் அன்பு செய்யக் கூடியவர்களாக, அரவணைக்கக் கூடியவர்களாக நாம் மாறுகின்ற போது, இறைவன் நம்மைப் பார்த்து பெருமிதம் கொள்பவராகவும், நம் மீது அதீத அன்பைப் பொழியக் கூடியவராகவும் இருக்கின்றார். ஆனால் இறைவன் உணர்த்துவதை உணர்ந்து கொள்ளாது, சக மனிதனை ஏற்றுக்கொள்ளாமல், சாதி, மதம், இனம், மொழி என பல பாகுபாடுகளை முன்னிறுத்தி, அடுத்தவரை புறக்கணித்து, இறைவன் விதைத்த அன்பை வெறும் வார்த்தையாக மட்டும் வைத்துக்கொண்டு பயணிப்பவர்களை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.
எப்படி ஒரு பணியாளன் கொடுத்த தாலந்தை நிலத்தில் மறைத்து வைத்து, அதைக் கொண்டு போய் மீண்டும் அவரிடத்திலேயே கொடுக்கக் கூடியவனாக இருந்தானோ அவனைப் போல, இறைவன் கொடுக்கின்ற அன்பை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளாது, சாதி, மத, இன, மொழி பாகுபாடுகளை முன்னிறுத்தி பயணிக்க கூடியவர்களாய் நாம் இருப்போமாயின், இறைவன் நம்மையும் புறம்தள்ளக் கூடியவராக மாறுவார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய், இந்த மண்ணிலே வாழும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொள்ளக் கூடியவர்களாகவும் மாறுவோம்.
எப்படி தவறான பாதையில் வழி நடந்த புனித அகுஸ்தினார் தன் வாழ்வில் மாற்றம் அடைந்த பிறகு பலரும் ஆண்டவரின் அன்பை அறிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் ஊன்றுகோலாய் மாறியது போல, நாமும் நமது வாழ்வில் இறைவனை மற்றவர் அறிந்து கொள்ள, அன்பின் வழி பாதையை உருவாக்குவோம்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
வியாழன், 26 ஆகஸ்ட், 2021
அறநெறியோடு வாழ... (27.08.2021)
அறநெறியோடு வாழ...
பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 27 வெள்ளி; கிழமை
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று நாம் தாய்த்திரு அவையாக இணைந்து புனித மோனிக்கா அவர்களை நினைவு கூருகின்றோம். யார் இந்த மோனிகா? என்றால் இவர் புனித அகுஸ்தினாரின் அன்னை. புனித அகுஸ்தினாரின் அன்னைக்கு திருஅவை ஏன் இவ்வளவு முக்கியத்துவத்தை தருகிறது என்றால், ஒரு பிள்ளையின் வளர்ப்பில் அதிக பங்கு வகிக்கக் கூடிய ஒரு பெண் அந்த குழந்தையின் தாயாக மட்டுமே இருக்க முடியும். அகுஸ்தினார் தனது வாழ்வில் பலவிதமான தவறுகளோடு அறநெறிக்கு முரண்பட்டு வாழ்ந்த நிலையில், அவர் அறநெறியோடு இந்த சமூகத்தில் நல்லதொரு குடிமகனாக வாழ வேண்டுமென அனுதினமும் இறைவனிடத்தில் மன்றாடியவர் தான் இன்று நினைவு புனித மோனிகா அவர்கள்.
இன்றைய முதல் வாசகத்தில் தெசலோனிக்க நகர மக்களுக்கு பவுல் வேண்டுகோள் விடுக்கிறார். அவர்களிடத்தில் இருக்கக் கூடிய பரத்தமையானது விலக்கப்பட வேண்டும், மேலும் ஒவ்வொருவரும் மதிக்கப் பட வேண்டும், மனைவியை தூயவராக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். இந்த சமூகத்தில் அறநெறியோடு எப்படி வாழவேண்டும் என்பதை அந்த மக்களுக்கு கற்பிக்கின்ற பணியினை அன்று பவுல் தெசலோனிக்க நகரில் செய்தார். அதே பணியைத் தான் புனித மோனிகாவும் தன்னுடைய மகனின் வாழ்வில் செய்தார்.
நாமும் இச்சமூகத்தில் அறநெறியோடு வாழ அழைக்கப்படுகின்றோம். இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட மானிட மகனின் வருகையை எதிர் நோக்கிய பலருள் முன்மதி கொண்டோர் மானிட மகனைக் கண்டு கொண்டது போல நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நாம் முன்மதியோடு செயல்படவேண்டும். ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவர் என்று எண்ணுவதை விட்டு விட்டு, நாம் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய் ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொண்டு, ஒருவருக்கு ஒருவர் துன்பம் விளைவிக்காது, இந்த சமூகத்தில் அறநெறியோடு இணைந்து வாழ இறையருளை வேண்டுவோம்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
புதன், 25 ஆகஸ்ட், 2021
விழிப்போடு இருக்க வேண்டும்... (26.08.2021)
விழிப்போடு இருக்க வேண்டும்...
பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை
இயேசுவின் தோழர்களே!
ஒரு ஆசிரியர் தன்னிடம் படித்த ஒரு மாணவன் நல்ல நிலையில் இருப்பதை கண்டு மகிழ்வது போல, இன்றைய நாள் முதல் வாசகத்தில் தான் நற்செய்தி அறிவித்த தெசலோனிக்க நகர் பகுதியைப் பற்றி அறிகின்ற பவுல், அந்த பகுதி மக்கள் ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அர்த்தம் உள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தவராய் அவர்களைப் பாராட்டுகிறார். அவர்கள் ஆண்டவரோடு உறவில் நிலைத்திருப்பதை கண்டு அவர் மகிழ்கின்றார். அவர்களது மகிழ்ச்சி தனக்கு பெருமகிழ்ச்சியாக மாறியது எனக் கூறுகின்றார். அவர்களுடைய அத்தகைய நல்வாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறக் கூடியவராக இருக்கிறார்.
இறைவன் படைத்த இவ்வுலகில் நம்மிடமிருந்து கற்றுக் கொண்டதை மற்றவர்கள் வாழ்வில் செயலாக்கப்படுத்துகிறார்கள் என்பதை கண்ணால் காணும் பொழுது, நமது உள்ளம் எவ்வாறு மகிழ்வாக இருக்கின்றதோ அது போலவே, பவுலின் உள்ளமும் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விழிப்பாய் இருப்பதற்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஒரு உண்மையான கிறிஸ்தவன் இந்த சமூகத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை நமது பெற்றோர், ஞானப்பெற்றோர், பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், நண்பர்கள். உறவுகள் என நாம் காணக்கூடிய பல நல்ல மனிதர்கள் நமக்கு ஒவ்வொரு நாளும் கற்றுக் கொடுக்கிறார்கள். கற்றுக் கொடுத்தவற்றை எல்லாம் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிட்டுச் செல்லக் கூடியவர்களாக நாம் இருப்போமாயின் அது அர்த்தமற்றதாக மாறிவிடுகிறது. மாறாக கற்றுக்கொடுத்த அனைத்தையும் மனதில் இருத்தி அவற்றை நமது வாழ்வில் நாம் செயலாக்கப்படுத்தும் போது தான் இறைவன் விரும்பக்கூடிய நல்ல பணியாளர்களாக நாம் இச்சமூகத்தில் வலம் வர முடியும். அதற்கு நாம் விழிப்பாக இருக்க வேண்டும். பிறர் நம்மை கவனிக்கிறார்கள் என்பதற்காக நாம் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்ல. நாம் எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் எல்லா நேரத்திலும் நாம் ஆண்டவர் இயேசு விரும்பக்கூடிய நல்ல மனிதர்களாக இச்சமூகத்தில் விழிப்போடு இருக்க வேண்டும். மேலும் எதிர்பாராத நேரத்திலும் நாம் நமது கடமைகளை சரியாக செய்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பயணிக்கின்ற போது நாம் எதிர்பாராத நேரத்தில் நமது வாழ்வுக்கான பரிசினை இறைவன் கண்டிப்பாக வழங்குவார். பரிசை எதிர்நோக்கி அல்ல, மாறாக இந்த சமூகத்தில் வழிப்போடு பயணித்து ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக நாம் மாறிடுவோம். இதுவே இறையரசை இம்மண்ணில் நிலைநாட்டுவதற்கான வழியாகும். நாம் நமது செயல் வழியாக இம்மண்ணில் இறையரசை நிலைநாட்டிட துவக்கப் புள்ளியாக மாறிட, இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021
போலியா? அசலா?... (25.08.2021)
போலியா? அசலா?...
பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 25 புதன்;கிழமை
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
ஒருமுறை சார்லி சாப்ளினை போல வேடம் அணிந்து வருபவர்களுக்கு பரிசு வழங்குவதாக போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் சார்லி சாப்ளின் கலந்து கொண்டார். அதில் அவருக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
ஆம்! அசலை விட போலிக்குத் தான் ஈர்ப்பு அதிகம். இன்றைய உலகம் இவ்வாறு தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் அக்காலத்தில் இருந்த மறைநூல் அறிஞர், பரிசேயர், சதுசேயர்களின் வெளிவேடத்தன்மையை இயேசு சுட்டிக் காட்டினார். அந்நிலையிலிருந்து அவர்கள் மாற்ற வேண்டும் என்பதை மிகவும் ஆணித்தரமாக அச்சமின்றி அனைவருக்கும் முன்பாகவும் எடுத்துரைக்கக் கூடியவராக இயேசு இருந்தார். இந்த இயேசுப் பின்பற்றிய சீடர்களும் தங்களுடைய வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறினார்கள். மக்கள் தவறான பாதைக்கு செல்லும் பொழுது அவர்கள் செல்லுகின்ற பாதை தவறு என்பதை சுட்டிக் காட்டக்கூடிய ஒரு இறைவாக்கினருக்குரிய பணியினை சிறப்பாக செய்தார்கள். இதைத் தான் இன்றைய நாள் முதல் வாசகத்தில் பவுல் தெசலோனிக்க நகர மக்களுக்கு எழுதுகிறார்.
நாங்கள் உழைத்தது, நாங்கள் நற்செய்தி அறிவித்தது அனைத்துமே உங்களுக்காகத் தான். இதன் உண்மையான நோக்கம் கடவுளுடைய வார்த்தை உங்களுக்குள் இருந்து செயலாற்ற வேண்டும் என்பதே என்று கூறுகிறார பவுல்;. கடவுளின் வார்த்தை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. வார்த்தை உள்ளுக்குள் இருப்பதால் எந்தவித பயனும் அல்ல. நாம் கேட்ட இறைவனது வார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக்கப்பட வேண்டும். பரிசேயரும், மறைநூல் அறிஞர்களும், சதுசேயர்களும் இறைவார்த்தையை கூறினார்கள். ஆனால் அது அவர்கள் வாழ்வில் செயலாக்கப்படவில்லை. எனவே தான் இயேசு அவர்களை சாடக் கூடியவராக இருந்தார்.
இந்த அழகிய உலகத்தில்; அனுதினமும் இறைவனது வார்த்தைகளை வாசிக்கின்றோம். இறைவனது வார்த்தைகள் ஒலிக்கப்படுவதை காதுகளால் கேட்கின்றோம். கேட்பதை கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் நாம் வாசிக்கின்ற இறைவார்த்தையும், நாம் கேட்கின்ற இறைவார்த்தையும், நம் இதயத்தில் பசுமரத்தாணியாய் பதிய வேண்டும். அவ்வாறு பதிய வைப்பது நமது வாழ்வில் செயலாக்கப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செயலாற்றும் போது நாமும் கடவுளின் வார்த்தைகளுக்கு ஏற்ப இம்மண்ணில் செயல்படக்கூடிய ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக மாறிட முடியும். நமது உள்ளங்களில் இருக்கின்ற இறைவார்த்தை நமது வாழ்வில் செயலாக்கம் பெற இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
திங்கள், 23 ஆகஸ்ட், 2021
பார்வை மாற்றம் ... (24.08.2021)
பார்வை மாற்றம் ...
பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 24 செவ்வாய்க்கிழமை
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய வாசகங்கள் பார்வை மாற்றம் பெறுவதற்கு நமக்கு அழைப்பு தருகின்றன.
இன்றைய முதல் வாசகம் திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யோவான் காட்சி மூலமாக கண்டவற்றை தொகுத்து எழுதியதே திருவெளிப்பாட்டு நூல் ஆகும். இந்நூல் நிகழ்காலத்iதில் நாம் சிறப்பாக வாழ வழிகாட்டக்கூடியதாகும். எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தோடு இன்று பலர் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆதில் முக்கிய பங்காற்றுவது நம்மிடையே இருக்கக்கூடிய முன் சார்பு எண்ணங்கள்.
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்திலும் கூட நாசரேத்து மக்களை குறித்த ஒரு முன் சார்பு எண்ணம் கொண்டவராக நத்தானியேல் இருக்கிறார். நத்தானியேலின் உள்ளத்தை அறிந்தவரான இயேசு கிறிஸ்து, அவர் வாழ்வில் நடந்த நிகழ்வை அவருக்கு கூறுகிறார். ஆண்டவர் கூறிய வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து போகிறார் நத்தானியேல். தன் பார்வையை மாற்றுகிறார். இறைவன் படைத்த இந்த உலகத்தில் நாம் மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்றே இறைவன் விரும்புகிறார். ஆனால் பல நேரங்களில் நமது வாழ்வில் துன்பம் துயரமும் சூழ்ந்திருக்கிறது. இந்த துன்ப துயரங்கள் நமக்கு முன் சார்பு எண்ணங்களை உருவாக்குகின்றன. அந்த எண்ணங்களின் அடிப்படையில் செயல்படுகின்ற போது துன்பத்தைக் கண்டு துவண்டு போகக் கூடியவர்களாகத் தான் நாம் இருக்கிறோம். ஆனால் துன்ப நேரங்களில் இறைவன் நம்மை வழிநடத்துகிறார். நம்மால் தாங்க முடியாத எந்த துயரத்தையும் அவர் நமது வாழ்வில் அனுமதிப்பதில்லை, என்பதை உணர்ந்து கொண்டு நாம் தொடர்ந்து இறைவன் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு நம்மிடம் பார்வை மாற்றம் நிகழ வேண்டும்.
நாம் முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் அடுத்தவரோடு உரையாடுவதும், பழகுவதும் என்று வழாமல். நமது பார்வையில் மாற்றம் பெற்றவர்களாய், வாழ்வில் நல்லதொரு மாற்றத்தோடு இயேசுவின் உண்மை சீடர்களாய், முன் சார்பு எண்ணங்களை களைந்து, ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இறைவனது விருப்பத்திற்கு ஏற்றவர்களாய் பயணிக்க இறையருளை இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021
வழிகாட்டிகளாக மாறிட... (23.08.2021)
வழிகாட்டிகளாக மாறிட...
பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திங்கள்கிழமை
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே நாம் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட ஒரு வழிகாட்டிகளாக இருக்கின்றோம்? என்று சிந்தித்துப் பார்க்க நமக்கு அழைப்பு தருகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய கடிதத்தில் அங்கு இருக்கக்கூடிய மக்களை பாராட்டுகிறார். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் மேலும் அவர்கள் கிறிஸ்துவின் மீது ஆழமான மன உறுதி கொண்டு இருக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கு நினைவு படுத்தும் விதமாக இந்த கடிதத்தை அவர்களுக்கு எழுதுவதாக நாம் வாசிக்கிறோம்.
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்றைய யூத சமூகத்தில் வாழ்ந்த வழிகாட்டிகளாக கருதப்பட்ட மறைநூல் அறிஞரையும், பரிசேயர் சதுசேயரையும் இறைவன் கடுமையாக சாடுகின்றார். காரணம், அவர்கள் தன்னலத்தை முன்னிறுத்தி மக்களை மதத்தின் பெயராலும் சட்டதிட்டங்களின் பெயராலும் தவறான போதனைகளின் அடிப்படையிலும் அடிமைப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு தலைவன் என்பவன் எப்படிப்பட்ட வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்கு இயேசுவும் அவரை பின் பற்றிய பவுலைப் போல பலரும் நமக்கு முன்னுதாரணமாக இருந்தாலும், எப்படிப்பட்டவர்களாக இருக்க கூடாது என்பதற்கு இந்த பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும், உதாரணமாக இருக்கிறார்கள்.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு தேவை செய்து காட்டுபவர்கள் தான், குறை கூறுபவர்கள் அல்ல என்பார்கள். இன்றைய சமூகத்தில் பெரும்பாலான மனிதர்கள் மற்றவரை குறை கூறுவதன் மூலமாக, தாங்கள் பெரிய வழிகாட்டிகள் என எண்ணிக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால், நாம் இந்த சமூகத்தில் இயேசுவைப் போல நல்ல வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். எப்படி இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் அவர்கள் போதிப்பதை எல்லாம் தங்களுடைய வாழ்வில் செயல்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்களோ அது போல, நாமும் நமது வாழ்வில் நல்ல வழிகாட்டிகளாக வாழ அழைக்கப்படுகிறோம். இயேசு நல்ல வழிகாட்டியாய் வாழ்ந்தார். அவரை பார்த்து அவரைப் பின்பற்றியவர்கள் அவரைப் போல மாறினார்கள். நம்மைப் பார்த்து நம்மை பின்பற்றுபவர்களும் நல்ல வழிகாட்டிகளாக மாற வேண்டுமாயின், நாம் நல்ல வழிகாட்டிகளாக இந்த சமூகத்தில் பயணிக்கவேண்டும். எனவே இறைவன் விரும்பக்கூடிய வகையில் இறைவனது வார்த்தைகளின் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்ட இயேசுவின் சீடர்களைப் போல, நாமும் இந்த சமூகத்தில் நல்ல வழிகாட்டிகளாக மாறிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
சனி, 21 ஆகஸ்ட், 2021
உடன் இருப்பவரை உணர்ந்து கொள்ள...(22.8.2021)
வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021
சொல்வதை செயலாக்கிட...(21.8.2021)
வியாழன், 19 ஆகஸ்ட், 2021
அன்பு சீடர்களாக மாறுவோம்....(20.8.2021)
புதன், 18 ஆகஸ்ட், 2021
எண்ணிப் பாராமல் எதையும் செய்யாதே!(19.08.2021)
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021
நம்மையே நாம் பிரதிபலிக்க...(18.08.2021)
திங்கள், 16 ஆகஸ்ட், 2021
எது எளிது?...(17.8.2021)
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021
நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...(16.8.2021)
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021
தாயும் (அன்னை மரியா) தாய் நாடும் ...(15.8.2021)
சுதந்திர தின விழா திருப்பலி முன்னுரை (15.8.2021)
குழந்தைகளைப் போல மனம்...(14.8.2021)
வியாழன், 12 ஆகஸ்ட், 2021
விலக்க நினைத்தாலும் விலக்க முடியாதவர் இறைவன்!...(13.08.2021)
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...