எது எளிது?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .
சேர்ப்பது எளிதா? இருப்பதை பகிர்வது எளிதா? என்று கேள்வியை எழுப்பினால், சேர்ப்பதை விட இருப்பதை பிறரோடு பகிர்வதே எளிதான காரியமாகும். சேர்ப்பதற்கு நாம் கடினப்படுகிறோம். கடினப்பட்டு சேர்த்ததை எல்லாம் இறைவன் இல்லாதவரோடு பகிர்ந்து கொண்டு வாழ அழைக்கின்றார்.
சேர்த்து சேர்த்து வைப்பதால், நம்மிடம் செல்வம் மிகுதியாவது போல தோன்றலாம். ஆனால் நாம் சேர்த்து வைத்த எதையும் எடுத்துக் கொண்டு இறுதி நாளில் இறைவனிடத்தில் செல்வதில்லை. நாம் சேர்த்து வைத்த அனைத்தையும் இங்கு யாரோ ஒருவருக்கு, அடுத்தவருக்காக விட்டுவிட்டு தான் செல்ல வேண்டிய நிலை. இதுவே உலகின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை மனித மனங்கள் நன்கு அறிந்திருந்தும் சேர்த்து வைப்பதில் தான் அதிக ஈடுபாட்டை காட்டக் கூடியவர்களாக அனைவரும் இருக்கின்றார்கள்.
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சேர்த்து வைப்பதில் உங்களுடைய ஈடுபாடு இருத்தல் ஆகாது. மாறாக, இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்வதில் தான், உங்களது ஈடுபாடு இருக்க வேண்டும் என்ற செய்தியினை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு தருகிறார். இருப்பதை இல்லாதவரோடு பகிரும்போது நமக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? என்று நாம் கைம்மாறை எதிர்பார்ப்பதை இறைவன் தவறு எனச் சுட்டிக் காட்டுகிறார். எதிர்பார்ப்புகளோடு நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிரும் போது நாம்
ஏமாற்றத்தையே அடையக் கூடிய நிலையும் உருவாகும்.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி இறைவன் படைத்த இந்த உலகத்தில், இருப்பதை எல்லாம் இல்லாதவரோடு பகிர்ந்து எப்போதும் ஒருவர் மற்றவரின் மகிழ்வை கண்டு நிறைவு கொள்ளக் கூடியவர்களாக, இந்த சமூகத்தில் பயணம் செய்ய இறைவன் நம்மை அழைக்கின்றார்.
அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், நமது வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கி கொண்டு, சேர்ப்பதை விட இருப்பதை பிறரோடு பகிர்வதே எளிதான காரியமாக இருக்கும். அந்த எளிதான காரியத்தை நமது வாழ்வில் செயலாக்கப்படுத்திட, இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக