நம்மையே நாம் பிரதிபலிக்க...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாளில் இறைவன் நம்மை ஆட்சி செய்கின்றார் என்பதை உணர்ந்து கொண்டு, நாம் நம்மை ஆட்சி செய்ய அடுத்தவரை நாடுவதை விட, நமது சுயத்தை உணர்ந்தவர்களாய், நம்மை நாம் பிரதிபலிக்கக் கூடியவர்களாய் வாழ இச்சமூகத்தில் அழைப்பு விடுக்கப்படுகிறது.
கண்ணாடி முன்பாக நிற்கும் பொழுது கண்ணாடி தன் முன்பாக நிற்பவரை பிரதிபலிக்கிறது. ஆனால் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் பலர் தங்களை பிரதிபலிப்பதை விட்டுவிட்டு, பல நேரங்களில் தங்களுடைய செயல்களால் பிறரை பிரதிபலிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பிறரைப் பார்த்து அவர்களைப் போல், அவர்களை போல் என்ற எண்ணத்தோடு பல நேரங்களில் தங்களை இந்தச் சமூகத்தில் பிரதிபலிக்க மறந்துபோய், பிறரை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இறைவன் எப்போதும் நம்மை நாம் இருப்பது போல இந்த சமூகத்தில் பிரதிபலிக்க அழைப்பு விடுக்கின்றார். நமது வாக்கும் வாழ்வும் ஆண்டவருக்கு உகந்ததாய் இச்சமூகத்தில் இருந்திட வேண்டும். நாம் நம்மை இந்த சமூகத்தில் பிரதிபலிப்பதற்கான ஒரு அழைப்பினை இன்றைய நாளில் இறைவன் தருகிறார். பலவிதமான கேள்விகளுக்கு மத்தியிலும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டது போல, பலவிதமான கேள்விகளுக்கு மத்தியிலும் எனக்குரியதை என் விருப்பம் போல கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா? என்ற அந்த குத்தகைக்காரரைப் போல, முதலாளியைப் போல, நாமும் இந்த சமூகத்தில் நம்மிடம் இருக்கக்கூடிய நல்லவைகளை, நமது விருப்பம் போல இந்த சமூகத்தில் பிரதிபலிக்க அழைப்பு தரப்படுகிறது.
நாம் நம்மை இந்த சமூகத்தில் பிரதிபலிக்க கூடியவர்களாக மாறுவோம். அடுத்தவரைப் பார்த்து, அடுத்தவரைப் போல இந்த சமூகத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ணுவதை விட்டு விட்டு, நம்மையே நாம் இந்த சமூகத்தில் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறிட இன்றைய நாள் அழைப்பு தருகின்றது.
அப்போது இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதித்து வழிநடத்தி காப்பார்.
எனவே நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம்மை நாம் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறிட இறையருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக