திங்கள், 9 ஆகஸ்ட், 2021

பிறருக்காக...(10.8.2021)

பிறருக்காக...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்றார் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் ...இதனைச் சற்று மாற்றி வாழ்வது ஒருமுறை வாழவைப்போம் ஒரு தலைமுறையாவது என்பதன் அடிப்படையில் வாழ்வதற்கு இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

இருப்பதை பிறரோடு பகிர்ந்திட இன்றைய முதல் வாசகம் அழைப்பு தருகின்றது.  இருப்பதை இல்லாதவ ரோடு பகிரும் போது கிடைக்கின்ற நிறைவானது நம்மை நிவர்த்தி அடையச் செய்யும் என்ற செய்தியினை அழகாக புனித பவுல் உணர்த்துகிறார்.  தொண்டு செய்ய விருப்பமுள்ளோர் என்னை பின் தொடரட்டும் என்று நற்செய்தி வாசகத்தின் வழியாக இறைவன் அழைக்கின்றார்.  

இருப்பதை இல்லாதவ ரோடு பகிர்ந்து தன்னார்வ மனதோடு தொண்டு பணி செய்யக்கூடியவர்களாக நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய நாளில் இறைவன் நமக்கு தருகின்ற செய்தி ... ஆனால் இன்று இறைவனின் பெயரால் இந்த உலகத்தில் இயங்குகின்ற நம்மில் பலரிடம் பகிர்வதற்கான மனமில்லை. மாறாக பெற்றுக்கொள்ளவே விரும்புகிறோம். பெற்றுக் கொள்வதை நிறுத்தி இருப்பதை பகிர்ந்து கொள்ள நாம் முயல வேண்டும்.  நம்மை அனைத்து நலன்களும் நிரப்ப கூடியவர் இறைவன் என்பதை உணர்ந்தவர்களாய் பகிர்ந்து வாழ்வதை நம் வாழ்வாக மாற்றிட நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்படுகிறோம் ... 
மண்ணில் மலர்ந்த நாம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்வதன் வழியாக இவ்வுலகத்தில் மனம் பரப்பிட முயற்சியினை மேற்கொள்வோம் ...மரணத்தைச் சந்திக்கின்ற நேரம்வரை ஏன் மரணத்திற்குப் பின்பும் கூட இந்த உலகத்தில் நமது செயல்களால் மனம் வீச கூடியவர்களாக மாறிடுவோம் ...

இதுவே நாம் இறைவனுக்கு செய்கின்ற தொண்டாகும் ... இந்தத் தொண்டினை செய்ய நாம் கோதுமை மணியை மண்ணில் விழுந்து மடிய வேண்டும் ...அப்போது நாம் தருகின்ற பலன் மிகுதியானதாக மாறும்.... எனவே இனிவரும் நாட்களில் நமக்காக வாழ்வதை விடுத்து பிறருக்காக அதுவும் பிறர் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து இயேசுவின் சீடர்கள் நாம் என்பதை செயலால் வெளி காட்டுவோம்...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...