வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

இன்று தேவையா ன இரண்டு... (7.8.2021)

இன்று தேவையா ன இரண்டு...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!



இன்றைய முதல் வாசகத்தில் மக்கள் எவ்வாறு அறநெறியோடு வாழ வேண்டும் என்பதற்காக மோசே வழியாக விதிமுறைகளும் சட்ட திட்டங்களும் இஜ்ரயேல் மக்களுக்கு தரப்பட்டன. விதிக்கப்படக்கூடிய விதிமுறைகளையும் உருவாக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களையும் ஏற்றுக்கொண்டு, பொறுமையோடு, சகிப்புத்தன்மையோடு இந்த உலகத்தில் நாம் பயணிக்க  இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

இன்றைய நாள் நற்செய்தி  வாசகத்தில் கூட, வயலில் கதிர்களுக்கு நடுவே பகைவர்கள் களைகளை விதைத்துச் சென்ற போது பொறுமையோடு அதனை வளரவிட்டு,  அறுவடை நேரத்தில் அனைத்தையும் அறுத்து,  பயிர்களை களஞ்சியத்திலும் களைகளை நெருப்பிலும் இடக்கூடிய  நிகழ்வு வழியாக இறையாட்சியின் மதிப்பீடை இறைவன் வெளிப்படுத்துகிறார். 

இறையாட்சிக்கு தகுதி உள்ளவர்களாக நாம் மாற வேண்டுமென்றால், நமது வாழ்வில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகமாக இருக்க வேண்டும்.  இந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் நம்மிடையே இருக்கின்ற போது, நாம் இந்த சமூகத்தில் இறையாட்சியை மலரச் செய்வதற்கான பணியில் துனிவுடன் ஈடுபடலாம். ஆனால் இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லாமை தான் இந்த சமூகத்தில் பலவிதமான அநீதிகள் உருவாகுவதற்கு வழி வகுத்துக் கொண்டு இருக்கின்றன.  ஆனால் ஆண்டவர் இயேசு இன்று பயிர்களுக்கு நடுவே விளைந்த களைகள் உவமை வழியாக,  நமது வாழ்வில் துன்பங்களும், துயரங்களும், இடையூறுகளும் ஏற்படுகின்ற போதெல்லாம் மனம் தளராது பொறுமையோடு, சகிப்புத்தன்மையோடு இருந்து, உரிய காலத்தில் அதனை வெற்றி கொள்ள பாடம் கற்பிக்கின்றார்.  இறைவன் உணர்ந்தும் வாழ்க்கை பாடத்தின் மகத்துவம் அறிந்தவர்களாய் வாழ்வில் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் முன்னிறுத்தி இந்த சமூகத்தில் நல்லதொரு இறையாட்சியின் பணியாளர்களாய் மாறிட இறையருளை வேண்டுவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...