திங்கள், 2 ஆகஸ்ட், 2021

கரம் கொடுக்கும் கடவுள்... (3.8.2021)

கரம் கொடுக்கும் கடவுள்... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!



இன்றைய முதல் வாசகத்தில் மோசேயின் மீது பொறாமை கொள்ளக் கூடிய ஆரோனையும் மிரியாமையும் இறைவன் தண்டிக்கின்ற நிகழ்வினை நாம் வாசிக்கக் கேட்கின்றோம்.  மேலும் நற்செய்தி வாசகத்தில் நம்பிக்கை குன்றிய சீமோனை இயேசு உறுதிப்படுத்துவதை வாசிக்க கேட்கின்றோம். 

இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே, நாம் நம்பிக்கையில் ஆழப்படவும் உறுதியான மனதோடு இச்சமூகத்தில் பயணிக்கவும் அழைப்பு தருகின்றன. மோசேயிடம் கடவுள் பேசுவதைக் கண்டு உள்ளத்தில் பொறாமை கொண்ட ஆரோனும் மிரியாமும் மேசேக்கு எதிராக பேசுகிறார்கள்.  அவர்கள் தாங்களும் மோசேயைப் போல கடவுளுக்கு ஏற்ற வகையில் வாழ வேண்டும் என எண்ணுவதை விட்டு விட்டு,  எதிர்மறையான எண்ங்களோடு  மக்களிடையே குழப்பங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

நாம் வாழுகின்ற இந்த உலகத்திலும் பல நேரங்களில் அடுத்தவருடைய வளர்ச்சியையும் அடுத்தவருடைய பெயரையும் புகழையும் கண்டு, அவர்களைப் போல நாமும் வாழ வேண்டும் என எண்ணுவதற்கு பதிலாக அவர்களை குறை கூறக் கூடியவர்களாகத் தான் பல நேரங்களில் பலர் இவ்வுலகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் உண்மையில் ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் உறுதியான மனப்பான்மையோடு, நம்பிக்கையோடு, ஆண்டவரின் பணியை செய்யக்கூடியவர்களாக இந்த சமூகத்தில் நாம் வலம் வர வேண்டும் என்பது தான் இறைவன் நமக்குத் தருகின்ற பாடமாக அமைகிறது. 

குடலில் நந்த இயேசுவை கண்டு கொள்வதற்கு முன்பாக பேய் என்று அலறிய சீடர்கள், கண்டு கொண்ட போது, நம்பிக்கையோடு அவரை நோக்கி கடலில் நடந்து வர வேண்டும் என ஆசை கொண்டார்கள்.  ஆனால் நடந்து வரும்போதே நம்பிக்கை தளர்வுற்றது. எனவே மூழ்கும் நிலைக்குச் சென்றார்கள். ஆனால் கடவுளோ, கரம் பிடித்து அவர்களை தூக்குகிறார். 

நாம் வாழுகின்ற இந்த உலகில் பல நேரங்களில் நாமும் நம்பிக்கையில் தளர்ச்சியுற்று,  வாழ்வில் நெறிதவறி நடக்கும் போதெல்லாம் இறைவன் நம்மை கரம் பிடித்து தூக்குகின்றார், பல நல்ல மனிதர்கள் வழியாக இறைவன் கரம் கொடுக்கின்றார், என்பதை கண்டு கொண்டு,  வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு நல்ல மனிதர்களாக இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழக்கூடியவர்களாகிட, இறையருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.


1 கருத்து:

  1. நல்ல மனிதர்களாக வாழ்வதிலே அடுத்தவரை பார்த்தும் கூட அவர்களது நல்ல பண்புகளையும் பார்த்துக் கூட நாமும் அதிகமதிகமாக நல்லவர்களாக வாழலாம் என்ற புதிய புதிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் வழங்கிவரும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் செபங்களும்! தொடரட்டும் தங்களின் பணிகள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...