ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...(16.8.2021)

நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் பார்வையில் இஸ்ரயேல் மக்கள் தீயதெனப்பட்டதை செய்தனர் என வாசிக்கக் கேட்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாம் நமது வாழ்வில் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதிலை இறைவன் தருகின்றார். 

      கட்டளைகளை கடைப்பிடிப்பதே அதற்கான வழி என முதலில் கற்பிக்கின்றார்.  நாம் கட்டளைகளை கடைப்பிடிப்பவராக இருக்கிறோம் என்றால் நம்மிடம் இருப்பதை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.  அவ்வாறு கொடுப்பதன் மூலம் நாம் நிறைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும் என்ற செய்தியினை இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகின்றார். 

      நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  நம்மிடம் இருப்பதை மற்றவரோடு பகிர்வதற்கு மனம் கொண்டவர்களாக நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் எழுப்பி பார்க்க நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். 

       பெறுவதில் மகிழ்ச்சி கொள்கின்ற நாம், நம்மிடம் இருப்பதை பிறரோடு பகிர்வதில் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்கின்றோம். நமக்கு என அனைத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ளவே மனித மனமானது விரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம்மில் சிலர் மட்டுமே இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து, இல்லாதவரின் துயரத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நாம் அத்தகைய பணியை செய்யக்கூடிய மனிதர்களாக இருக்கும் போது மட்டுமே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும் என்ற செய்தியினை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகின்றார். இறைவன் காட்டக் கூடிய வழியினை பின்பற்றி நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம்.

1 கருத்து:

  1. குழந்தை மனம் வேண்டும்! தன்னைப் போல பிறரையும் நேசிக்கவேண்டும்! மற்றவரில் இறைவனைக் காண வேண்டும்! என்ற கருத்துக்களை எளிமையாக அனைவரின் உள்ளத்திலும் ஏற்றுக் கொள்ளும் விதமாக அழகாக எடுத்துரைத்த அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் செபங்களும்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...