வியாழன், 5 ஆகஸ்ட், 2021

விடிவெள்ளி நம் இதயத்தில் ஒளிர்ந்திட ... (6.8.2021)

விடிவெள்ளி நம் இதயத்தில் ஒளிர்ந்திட ... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!



இன்று தாய் திருஅவையானது இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்த விழாவினை நினைவு கூருகின்றது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாம் சீடர்களோடு மலையில் தனிமையில் இருந்த நேரத்தில், உருமாற்றம் அடைந்தார்.  அப்போது வானத்திலிருந்து, "இவரே என் அன்பார்ந்த மகன்! இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்"என்ற குரலோசை கேட்டது. இதுவே இன்றைய வாசகங்களின் மையமாக உள்ளது. 

இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நமது செயல்களையும் சொல்லையும் முன்னிட்டு,  கடவுள், அன்று  இயேசுவை பார்த்துக் கூறியது போல,  "இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்! இவரே என் அன்பார்ந்த மகன்" என்ற வார்த்தைகளை உதிர்ப்பாரா? என்ற கேள்வியை நாம் இன்றைய நாளில் நமது உள்ளத்தில் எழுப்பி பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.  ஆண்டவர் இயேசுவின் சொல்லும் செயலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாய், ஒன்றோடு ஒன்று இணைந்திருந்தது.  எனவேதான் அவரை குறித்து கடவுள் பூரிப்படையக் கூடியவராக இருந்தார். 

நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நாம், பல நேரங்களில்  சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும்,  நபர்களுக்கு ஏற்ற வகையிலும் மாறி மாறி செயல்படக் கூடியவர்களாக இருக்கிறோமே தவிர,  சொல்லும் செயலும் இணைந்து செல்லுகின்ற ஒரு மாற்றமானது, நமது உள்ளத்திலிருந்து நமது வாழ்வில் வெளிப்படுகிறதா?  என்று சிந்திக்க இன்றைய நாள் அழைப்பு தருகிறது. நமது சொல்லும் செயலும் இணைந்து செயல்படக்கூடிய நல்லதொரு மாற்றத்தை தான் இந்த உருமாற்றப்பெருவிழா வழியாக இறைவன் நமக்குத் தருகின்ற செய்தியாக இருக்கின்றது.  ஆண்டவர் தருகின்ற செய்தியினை உணர்ந்து கொண்டவர்களாய்,  சொல்லும் செயலும் இணைந்து போகக் கூடிய ஒரு மாற்றம் அடைந்த மனிதர்களாய் இச்சமூகத்தில் நாமும் உருமாற்றம் அடைந்து, அம்மாற்றம் விடிவெள்ளியாய் நம் இதயத்தில் ஒளிர்ந்திட  இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...