வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

நம்பிக்கை நமது வாழ்வின் மையம் ஆகட்டும்!(7.8.2021)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 நம்பிக்கை நமது வாழ்வின் மையம் ஆகட்டும்!

 இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நம்பிக்கையோடு இந்த சமூகத்தில் பயணிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். மோசே இஸ்ரயேல் மக்களை நோக்கி, முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் கடவுளை அன்பு செய்யுங்கள் என கற்பித்தார். திரும்பும் திசை எங்கும் ஆண்டவரின் வார்த்தைகள் இடம் பெற வேண்டும் என கற்பித்தார். ஏன் இவற்றை அவர்களுக்குச் சொன்னார்? என சந்திக்கின்ற பொழுது, தங்களை வழி நடத்துகின்ற இறைவனை அவர்கள் எல்லா நேரமும் நினைவில் கொள்ளவேண்டும். அவர் மீது கொண்ட நம்பிக்கையின் பொருட்டு அவர்கள் நலமான பணிகளை இச்சமூகத்தில் முன்னெடுக்க வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டே, இஸ்ரயேல் மக்களுக்கு மோசே நம்பிக்கையை பாடமாக கற்பிக்கின்றார். அதே நம்பிக்கையை தான் இறைவன் இயேசு கிறிஸ்துவும் தன்னுடைய சீடர்களுக்கு இன்று கற்பிப்பதை நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்கின்றோம்.

 நம்பிக்கையோடு நாம் இந்த சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் இறைவன் தருகின்ற செய்தி. நாம் கடவுள் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையை சற்று நிதானமாக அமர்ந்து சிந்தித்துப் பார்த்து நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஆளப்படவும்,  அந்த நம்பிக்கையின் பொருட்டு, இந்த சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுக்க கூடிய இயேசுவின் பணியாளர்களாய் நாம் பயணிக்கவும் இன்றைய  நாளில் அழைக்கப்படுகின்றோம். அழைப்பது இறைவன் என்பதை உணர்ந்து கொண்டு அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, இந்த சமூகத்தில் அனுதினமும் நல்ல பணிகளை முன்னெடுக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.  அப்பணிகளை முன்னெடுக்க கூடிய இயேசுவின் சீடர்களாய் இச்சமூகத்தில் பயணம்செய்து இவ்வுலகத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளை நிலைநாட்டிட உறுதி ஏற்றவர்களாய் பயணத்தை மேற்கொள்வோம் வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...