செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

காத்திருத்தல் ... (4.8.2021)

 

காத்திருத்தல் ...

இரவு பகலுக்காய் காத்திருக்கிறது. 

பகல் இரவுக்காய் காத்திருக்கிறது.

சூரியன் நிலவுக்காய் காத்திருக்கிறது. 

நிலவு சூரியனுக்காய் காத்திருக்கிறது.

காத்திருந்தால் கடவுளையும் கண்டுகொள்ள முடியும்



இன்றைய நாளில் திரு அவையும் காத்திருந்து கடவுளைக் கண்டு கொண்ட ஒரு மாமனிதரை நினைவு கூருகிறது. அவர்தான் புனித ஜான் மரிய வியான்னி. தன் வாழ்நாளில் குருத்துவ பணியாற்றுவதற்காக பல வருடங்கள் காத்திருந்து இறையருளால் அப்பலனை பெற்று நல்லதொரு குருவாக, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் விளங்கியவர். எனவே இந்த நாளில் குருக்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் உரித்தாக்கி மகிழ்வோம்.  காத்திருந்தால் கடவுளை நாம் கண்டுகொள்ள முடியும்.  இஸ்ரயேல் மக்கள் காத்திருந்து கானான் நாட்டை உரிமைச் சொத்தாக மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் காத்திருந்ததையும், அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ள முயற்சித்ததையும் தான் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்டோம். 


இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட கானானியப் பெண் தன் மகளின் நலனுக்காக, ஆண்டவரிடத்தில் மன்றாடினாள். ஆனால் அவளது மன்றாட்டிற்கு பதில் மொழி தராதவராக,  இயேசு தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையிலும், காத்திருந்து அவரின் செவிகளுக்கு தன் மன்றாட்டுகளை மீண்டும் மீண்டுமாக கொடுத்துக்கொண்டே இருந்தாள் அப்பெண்மணி. அவளின் நம்பிக்கையைக் கண்டு, அவளோடு உரையாடி, அவளுக்குத் தேவையானதை இறைவன் தந்தருளியதை இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். 


இன்றைய நாள் வாசகங்களும், இன்று நாம் நினைவு கூரும் புனிதரும் நமக்குச் சொல்லுகின்ற செய்தி,  நாமும் கடவுளிடத்தில் மன்றாடும்போது காத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் பல நேரங்களில் இறைவனிடத்தில் சில மன்றாட்டுக்களை  எழுப்புவது உண்டு.  நாம் எழுப்பிய மன்றாட்டுக்களுக்கு உடனடி பதிலை நாம் எதிர்பார்க்கக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம். ஆனால் நமக்கு எப்போது, எது தேவை என்பதை, நாம் கேட்பதற்கு முன்பாக அறிந்திருப்பவர் இறைவன்.  அவர் அதனை அதற்கான நேரத்தில் தருவார் என்ற நம்பிக்கையோடு,  நாம் தொடர்ந்து  காத்திருக்க அழைக்கப்படுகின்றோம். காத்திருந்து நமது மன்றாட்டுகளை இறைவனிடத்தில் பெற்றுக்கொள்ள, இன்றைய நாளில்; நாம் அழைக்கப்படுகின்றோம். எனவே நம்பிக்கையோடு கானானியப் பெண்ணைப் போல,  நமது மன்றாட்டுக்களை ஆண்டவரிடத்தில் தொடர்ந்து எழுப்புவோம்.


       நம் தேவைகளை அறிந்த இறைவன் தேவையான நேரங்களில் நம் மன்றாட்டுகளுக்கு கானானியப் பெண்ணுக்கு பதில் மொழி தந்தது போல, நமக்கும் தருவார் என்ற  நம்பிக்கையோடு,  கடவுளை நோக்கி காத்திருக்கக் கூடியவர்களாக, நமது வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும் இறைவனை முன்னிலைப்படுத்தி செயல்பட  இறை அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...