ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

அன்பு செய்ய...(9.8.2021)

அன்பு செய்ய...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மனிதன் ஒரு சமூகப் பிராணி என்று கூறுவார்கள்.  இந்த சமூகத்தில் நாம் ஒருவர் மற்றவரை சார்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இந்த உலகத்தில் நாம் ஒருவர் மற்றவரை சார்ந்து கொண்டிருக்கின்ற போது, ஒருவர் மற்றவரை எந்தவித வேறுபாடுமின்றி அன்பு செய்யவும் ஏற்றுக்கொள்ளவும் மதிக்கவும் கடமைப்பட்டு இருக்கிறோம். இதைத்தான் இன்றைய நாள் வாசகங்கள் இன்று நமக்கு உணர்த்துகின்றன. 

         மோசே எகிப்தில் இருந்து மீட்டு வந்த இறைவனை எப்போதும் மனதில் நினைவு கூர வேண்டும், அவர் நம்மை அன்பு செய்வது போல, நாமும் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்ற பாடத்தை இஸ்ரயேல் மக்களுக்கு கற்பிக்கின்றார். அது போலத் தான் இறைவனும் இந்த உலகத்தில் ஆட்சியாளர்கள் மீது எப்போதும் அதிருப்தியோடு வாழுகின்ற மக்களிடையே அவர்கள் யாருக்காக இதனை  செய்கிறார்கள்? ஆட்சியாளர்கள் உருவானது எதற்காக?  அவர்கள் எந்த பணத்தை கொண்டு நமக்கு நற்செயல்களை   புரிகிறார்கள்? என்பதனை தெளிவுபடுத்தும் விதமாக,  அவர்கள் நமக்காக பணியாற்றுகிறார்கள்.  
நாம் அவர்களை செய்யவேண்டும்.  குறைகள் இருப்பினும், குறைகளுக்கு மத்தியில் அவர்களிடம் இருக்கும் நிறைகளைக் கண்டு அவர்களை அன்பு செய்ய வேண்டும்.  அவர்களும் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டவர்களாக செயல்படுகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் இன்றைய நாள் வாசகங்கள் அமைந்திருக்கின்றன.  இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குத் தருகின்ற செய்தியும் இதுதான்.  

        நமக்கு தருகின்ற செய்தி, நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும்.  ஒருவர் மற்றவருக்காக செய்கின்ற தியாகங்களை புரிந்து கொள்ள வேண்டும்.  இன்று புரிந்து கொள்ளப்படாத தியாகங்களால் தான் பலவிதமான மன வருத்தங்களும், மன உளைச்சல்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடுத்தவரின் சின்னஞ்சிறு தியாகங்களையும் கண்டு கொள்ள முயலுவோம். அடுத்தவர் நமக்கு செய்கின்ற நன்மைகளுக்கு பதிலாக நாமும் பிறருக்கு நன்மை செய்வோம். நாம் அடுத்தவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்து, இந்த சமூகத்தில் வாழக் கூடியவர்களாக இருக்கின்ற போது, நாம் கடவுளை அன்பு  செய்பவர்களாக மாறுகின்றோம்.  ஏனென்றால் நாம் அருகில் இருப்பவரை அன்பு செய்வதைத் தான் கடவுள் எப்போதும் விரும்புகிறார்.  அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாம் இந்த உலகத்தில் இருப்பது அடுத்தவரின் நலனுக்காக, அடுத்தவரை அன்பு செய்வதற்காக என்பதை புரிந்து கொண்டவர்களாய்,  இனி வருகின்ற காலம் முதல் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ இறையருள் வேண்டி இணைந்து செபிப்போம் இன்றைய திருப்பலி வழியாக .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...