வெள்ளி, 7 ஜனவரி, 2022

செல்வாக்கு பெருகவேண்டுமா? குறைய வேண்டுமா? (08.01.2022)

செல்வாக்கு பெருகவேண்டுமா? குறைய வேண்டுமா?





        மனிதர்களாகிய ஒவ்வொருவரிடத்திலும், தான் உயர வேண்டும், தன் மதிப்பு உயர வேண்டும், தன்னிடம் உள்ள செல்வம் உயர வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.


ஆனால், இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட வாசகத்தின் அடிப்படையில் சிந்திக்கின்ற பொழுது,  யோவான் முற்றிலும் மாறுபட்டவராக, இயேசு உயரவேண்டும்,  இயேசுவின் செல்வாக்குப் பெருக வேண்டும் என்ற வார்த்தைகளோடு,  தன் வாழ்வை அமைத்துக் கொண்டு பயணிப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. 


இவரிடத்தில் காணப்பட்ட இத்தகைய பண்பு, நம்மிடத்திலும் காணப்பட வேண்டும்.  நம்மை,  நமது செயல்களை முன்னிலைப்படுத்துவதை விட்டுவிட்டு,  அடுத்தவரை முன்னிலைப்படுத்தக்  கூடியவர்களாக நாம் இச்சமூகத்தில் உருவாகிட வேண்டும்.


அதற்கு நம் உள்ளத்திலே திருமுழுக்கு யோவானிடம் காணப்பட்ட தாழ்ச்சி என்பது இருத்தல் வேண்டும்.  இந்த தாழ்ச்சி நமது உள்ளத்தில் இருக்கும் போது,  நாம் அடுத்தவர் மீது பொறாமை கொள்ளவோ, கோபப்படவோ வேண்டிய  சூழ்நிலை ஏற்படாது. மனமகிழ்வோடு தாழ்ச்சியோடு,  அடுத்தவர் நலனை முன்னிறுத்தி,  நலமான பணிகளை இச்சமூகத்தில் செய்யக்கூடியவர்களாக நாமும் உருவாகிட இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...