நம்பிக்கைக்குரிய மனிதர்களை ஊக்கப்படுத்தவும்
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நம்பிக்கை இருந்தால் எதிலும் நம்பி, கை வைக்க முடியும் எனக் கூறுவார்கள். இரண்டு நம்பிக்கைக்குரிய நபர்களை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம். இருவரும் தங்களிடம் இருப்பதை எல்லாம் வைத்து நல்ல உடல் நலனை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பியவர்கள். அதில் ஒருவர் தனது மகளின் நலனை விரும்பினார். ஒரு பெண்மணி தன்னுடைய நலனை விரும்பினாள். ஆனால் தங்களிடம் இருந்த எதுவும் அவர்களுக்கு நலனைத் தரவில்லை. ஆனால் ஆண்டவரிடம் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை அவர்களுக்கு உடல் நலனை தந்தது. நாமும் இந்த உலகத்தில் நிலையானது என எண்ணி எதை எதையோ பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் பிடித்துக் கொண்டு இருப்பவை எல்லாம் நமக்கு எப்போதும் கை கொடுப்பதல்ல.
நாம் ஆண்டவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே, நமக்கு எல்லா நேரத்திலும் கைகொடுக்கும். அந்த நம்பிக்கையோடு இந்த சமூகத்தில் நல்ல பணிகளை செய்வோம். நம்பிக்கைக்குரிய மனிதர்களை உருவாக்கவும், நம்பிக்கைக்குரிய மனிதர்களை ஊக்கப்படுத்தவும் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக