சனி, 8 ஜனவரி, 2022

திருமுழுக்கின் உண்மை தன்மை...(09.01.2022)

  திருமுழுக்கின் உண்மை தன்மை...



இயேசுவில் அன்புக்கு உரியவர்களே! 

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நிகழ்வை இன்றைய நாளில் நாம் வாசிக்க கேட்டோம். ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு அவரது பணியைத் தொடங்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியானது. 

    நாமும் திருமுழுக்கு என்ற அருள்சாதனத்தைப் பெற்றோம்.  குழந்தையாக இருந்த போது அதனை அறியாது பெற்றோம்.  ஆனால் வளரும் பருவத்தில் திருமுழுக்கு என்பது என்ன? என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறோம். திருமுழுக்கு வழியாக நாம் பெற்றுக்கொண்ட கடவுளின் அருளை மனதில் கொண்டு,  இயேசுவைப் போல இந்த சமூகத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளை அறிவிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம். 

    ஆனால்,  இன்று வாடிக்கையாக கொண்டாடும் விழா போலத்தான் திருமுழுக்கையும்  நம்மில் பலர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். திருமுழுக்கு என்பது நம்மை திருஅவையோடும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடும் இணைக்கின்ற ஒரு இணைப்பின் அடையாளம். இந்த அருள்சாதனத்தின் உண்மை தன்மையை உணர்ந்து கொண்டவர்களாய், நாம் இச்சமூகத்தில் இறையரசை பறைசாற்றும் இயேசுவின் சீடர்கள் ஆகிட இறையருளை வேண்டுவோம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...