திங்கள், 10 ஜனவரி, 2022

நமக்கு இங்கு என்ன வேலை? ...(11.01.2022)

நமக்கு இங்கு என்ன வேலை? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய நாளின் முதல் வாசகத்தில் குழந்தை பெற இயலாத பெண்மணியான அண்ணா ஆண்டவரின் முன்னிலையில் என்று தனது துயரத்தை அழுகையோடு எடுத்துரைத்த போது தூரத்திலிருந்து அதனை தவறுதலாக புரிந்து கொண்ட குரு ஏறி அப்பன் ஒரு குடி காரி என எண்ணி அவரை சாடுகிறார் ஆனால் தனது துயரத்தை அவரிடம் எடுத்துரைத்த போது அவர் சொன்னவற்றை கேட்டு மனம் வந்தவராய் துயரத்தோடு வந்த அந்தப் பெண்மணிக்கு மனநிறைவோடு செல் இறைவன் உன்னை காத்தருள்வார் எனக்கூறி ஆறுதலான வார்த்தைகளோடு அவரை அனுப்பி வைக்கக் கூடிய செயலில் ஈடுபடுவதை நாம் வாசிக்க கேட்கின்றோம்.

அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவி பிடித்திருந்தது மனிதன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நோக்கி உமக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வியை எழுப்பினார் இன்று நாமும் நமக்கு உளவாக இதே கேள்வியை எழுப்பி பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

கேள்வியை எழுப்பிய மனிதன் நின்றுகொண்டிருந்த இடம் ஒரு தொழுகைக் கூடம் தொழுகைக் கூடம் என்றாலே யூதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இறைவாக்கினர்களின் நூல்களை வாசித்து கடவுளோடு உரையாடுகின்ற வழிபடுகின்ற இடம் அங்கு சென்று இயேசுவினிடத்தில் தியாவை கொண்டிருந்த மனிதன் உமக்கு இங்கு என்ன வேலை என கேள்வியை எழுப்பினார்.

கேள்வியை எழுப்பிய தியாவை கொண்ட மனிதனுக்கு இயேசு தன் செயலால் பதில் தந்தார் அம்மனிதன் மீது கோபம் கொள்ளவில்லை மாறாக மனிதன் மீது பரிவு கொண்டார் அவனிடத்தில் இருந்த தீய ஆவியை விரட்டினார் தன் செயலால் தன் பணி என்ன என்பதை அங்கிருந்த அனைவருக்கும் அவர் கற்பித்தார்.

இன்று நாம் அனைவரும் நமக்கு இங்கு என்ன வேலை என கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம்.   இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்குமே இவ்வுலகத்தில் பல பணிகள் இருந்தாலும் தலையாய பணி அடுத்தவரை அன்பு செய்கின்ற அன்பு மட்டுமே...

இந்த அன்பு பணியின் காரணமாகவே தன்னை நோக்கி குரல் எழுப்பிய மனிதன் மீது பரிவு கொண்டு அவனுக்கு நலமான வற்றை செய்யக் கூடியவராக இருந்தார் இந்த இயேசுவை பின்பற்றுகின்ற நமது வாழ்விலும் அவரிடம் காணப்பட்ட நற்பண்புகள் மேலோங்க வேண்டும்.
துன்பத்தோடு வருகின்ற மக்களுக்கு ஆறுதல் தந்து மன நிறைவோடு செல்ல அவர்களுக்கு நாம்  வழிகாட்டவும் நம்மை எதிர்க்கும் உள்ளங்களை கூட நாம் அன்பால் அவர்கள் மீது பரிவு கொண்டு அவர்களுக்கு நன்மைகளை செய்து இந்த மண்ணில் வாழுகின்ற காலம் வரை இயேசுவின் இறையாட்சியின் விழுமியங்களை நமது நோக்கமாக கொண்டு செயல்பட இறையருளை வேண்டுவோம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...