ஞாயிறு, 2 ஜனவரி, 2022

அறநெறிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல... (3.1.2022)

 அறநெறிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல...



    ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் பணியைத் தொடங்குகிறார். சமூகத்தில் அறநெறி என்பது அதிகம் இருக்கிறது. அறநெறி உருவாக்கப்பட்டதே அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே. இயேசுவும் தன்னுடைய சிறுவயது முதல், சமூகத்தில் நிலவிய அறநெறிகளான, ஆண்டவரை சென்று சந்திப்பது,  தொழுகைக் கூடத்தில் அமர்ந்து செபிப்பது போன்ற பணிகளை செய்து வந்தார். எனவேதான் அவர் தமது பணியினை மக்கள் அதிகம் கூடக் கூடிய, தொழுகைக் கூடங்கள் வீதிகள் என்று, மக்கள் பெரிதும் நடமாடக் கூடிய இடங்களில் செய்யத் துவங்கினார்.


    இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நாமும் இந்த சமூகத்தில் இருக்கக்கூடிய அறநெறிகளை,  இன்முகத்தோடும், விருப்பத்தோடும், பின்பற்றி நடக்கக் கூடியவர்களாக மாற வேண்டும். திருஅவையின் கட்டளைகள் என்ன என்பது நமக்குத் தெரியும்.


1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் திருப்பலியில் முழுமையாய்ப் பங்கேற்க வேண்டும். இந்நாள்களின் புனிதத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

2. ஆண்டிற்கு ஒரு முறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க வேண்டும்.

3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்று, நற்கருணை உட்கொள்ள வேண்டும்.

4. திரு அவை குறிப்பிட்டுள்ள நாள்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும். நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம்.

5. குறைந்த வயதிலும், திருமணத் தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.

6. திரு அவையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.



    நாம் அறநெறியோடு வாழ திருஅவை நமக்கு கற்பிக்கின்ற இந்த ஆறு கட்டளைகள்  நமது வாழ்வில் இன்று செயலாகின்றதா? அல்லது நாம் கட்டளைகளை வெறுமனே உதாசீனப்படுத்திவிட்டு நகரக் கூடியவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

    

    இயேசுவைப் போல சிறுவயது முதலே அறநெறியை பின்பற்றும் மக்களாக மாறுவோம். அப்போது தான் நாமும் இயேசுவைப் போல இந்த சமூகத்தில் அறநெறிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை உணர்ந்து உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொள்வோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...