மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்...
இயேசு கிறிஸ்து மனம் மாறி நற்செய்தியை நம்ப ஒவ்வொருவருக்கும் அழைப்பு தருகின்றார்.
தான் அழைப்பதோடு மட்டுமல்லாமல், தன்னோடு இணைந்து பயணிப்பதற்காகவும் இச்சமூகத்தில் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்குமாக, தன்னுடைய சீடர்களை தேர்வு செய்கிறார்.
அவர் தேர்வு செய்த சீடர்கள் எல்லாம் பெரிய படித்த பட்டம் பெற்றவர்கள் அல்ல. சாதாரண ஏழை எளிய மக்கள். அவர்களை அழைத்தபோது, இந்த ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டவர்களாய் அவர்களும் தங்களிடம் இருப்பதை எல்லாம் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
நாம் இந்த உலகத்தில் வாழுகின்ற காலங்களில் எதன் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறோம் என சிந்திப்போம். ஆண்டவர் இயேசுவின் இறைவார்த்தைகளின் மீது அதீத நம்பிக்கை கொண்டு பயணிக்க இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக