நால்வரை போல நாமும் ...
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
முடக்குவாதமுற்ற ஒருவனை நான்கு நபர்கள் சுமந்துகொண்டு இயேசுவிடம் வந்தார்கள். உடல் நலமற்று இருப்பவனின் நம்பிக்கை ஒரு புறம் இருக்க, அவனைத் தூக்கி வந்தவர்களின் நம்பிக்கை மற்றொரு புறம். அனைவரிடத்திலும் காணப்பட்ட நம்பிக்கையே, ஆண்டவர் இயேசுவை நலமான பணியினை செய்ய வைத்தது.
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், நம்பிக்கையோடு இருப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் நம்பிக்கையை ஊக்கமூட்டும் வகையில் செயல்படுபவர்களாக நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை நம்மிடையே எழுப்பிப் பார்ப்போம். நம்பிக்கையற்ற மனிதர்களுக்கு நம்பிக்கையைத் தருவதும், நம்பிக்கையோடு இருக்கக்கூடிய மக்களுக்கு, நம்பிக்கையை ஆழப்படச் செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நலமான பணிகளை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்ற செய்தி இன்றைய நாளில் நமக்கு வழங்கப்படுகிறது. முடக்குவாதமுற்றவனை தூக்கி வந்த நால்வரை போல போல நாமும் நம்பிக்கையாளர்கள் பலரை ஆண்டவரிடம் அழைத்து வருவதற்கான பணியில் ஈடுபட இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக