நாம் விழுந்திருக்கும் நிலம் எது ?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
மண்ணில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருமே இந்நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் தான். இந்த நிலத்தில் நாம் படைக்கப்பட்டதன் நோக்கம், நாம் விருட்சமாக வளர்ந்து பலன் தர வேண்டும் என்பதற்காகவே. ஆனால் பல நேரங்களில் நாம் எந்த நிலத்தில் விழுந்திருக்கிறோம் என்பதை அலசிப் பார்ப்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்றாகும்.
விதைக்கப்பட்ட விதை ஒன்று தான். அது விழுந்த இடமோ மாறுபடுகிறது. விழுந்த இடத்திற்கு ஏற்ற வகையில் விருட்சம் உருவாகிறது. நாம் எந்த நிலத்தில் விழுந்து இருக்கிறோம் என யோசித்துப் பார்ப்போம். பாலை நிலமா? பாதையோரமா? பாறையின் மேல் தளமா? அல்லது நல்ல நிலமா? எங்கு நாம் விழுந்து கிடக்கிறோம்? விழுந்து கிடக்கிறோம் என்றால் நாம் பிறந்திருப்பது அர்த்தம் அல்ல.
ஆண்டவரின் வார்த்தையானது நமது உள்ளத்தில் விதைக்கப்பட்டது. அந்த இறை வார்த்தை நமது உள்ளத்தில் இருந்து எத்தகைய செயல்பாட்டை நம்மை செய்ய வைத்திருக்கிறது? பாலை நிலத்தில் விழுந்த விதை போல நமது செயல்பாடுகள் இருக்கிறதா? அல்லது பாறை மீது விழுந்த விதை போல நமது செயல்பாடு உள்ளதா? முட்களிடையே விழுந்த விதை போல நமது செயல்பாடு உள்ளதா? அல்லது நல்ல நிலத்தில் விழுந்த விதை போல நமது செயல்பாடு உள்ளதா? நல்ல நிலத்தில் விழுந்த விதை போல நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். அவரது விருப்பம் நம்மில் நிறைவேற நாம், விழுந்திருக்கும் நிலம் எது என்பதை கண்டு கொண்டு, ஆண்டவருக்கு விளைச்சலைத் தரக்கூடிய, அவரது விருப்பப்படி செயல்படக்கூடிய, நல்ல பணியாளர்களாக இறை அருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக