செவ்வாய், 11 ஜனவரி, 2022

அருகில் இருப்பவரின் தேவையை கண்டுகொள்ளவோம்...(12.01.2022)

அருகில் இருப்பவரின் தேவையை கண்டுகொள்ளவோம்...



    இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது பலவிதமான புதுமைகளைச் செய்தார். அவர் செய்த புதுமைகளுள் சிறப்பு வாய்ந்த ஒன்றாகத் தான் இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட பேதுருவின் மாமியாரை குணப்படுத்தும் நிகழ்வானது அரங்கேறுகிறது.  ஏன் இந்தப் புதுமை மிகவும் சிறப்பு வாய்ந்தது என சிந்திக்கின்ற போது, இயேசு இதுவரை செய்த அனைத்துப் புதுமைகளும் அவரைத் தேடிவந்த, யாரென்றே அறியாத பலருக்கு செய்த உதவிகள். ஆனால் இந்த புதுமையில்,  இயேசு தன்னோடு உடன் பயணித்த பேதுருவின் குடும்பச் சூழ்நிலையை உணர்ந்தவராய்,  அவருக்கு அத்தகைய புதுமையை செய்கின்றார்.


 நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பெரும்பாலும் வெளியே இருக்கக்கூடிய நபர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறோம். ஆனால் நம் அருகில் இருப்பவர்களை கண்டு கொள்ள மறந்து விடுகிறோம். நம் அருகில் இருப்பவர்களின் தேவையை கண்டு கொள்ள மறந்து விடுகிறோம். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எல்லாச் சூழ்நிலையிலும், நம் அருகில் இருப்பவர்கள் எப்போதும் நம்மோடு இருக்கிறார்கள். நம்மோடு இணைந்து இன்ப துன்பங்களில் பங்கேற்கிறார்கள். ஆனால் நாம் அவர்களின் இன்ப துன்பங்களில் அதிக கவனம் செலுத்தி பங்கேற்பது உண்டா? என்ற கேள்வியை  இன்று நம்முள் எழுப்பிப் பார்ப்போம். இயேசு பல விதமான பணிகளை செய்தாலும் தன்னுடன் இருந்தவர்களின் தேவையை அறிந்திருந்தார்.  தன்னுடன் இருந்தவர்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய இன்னல்களை உணர்ந்தவராய்,  அவர்களுக்கு நலம் தரும் பணியைச் செய்கிறார். நாமும் நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பலரை தேடித் தேடிச் சென்று உதவினாலும், நம் அருகில் இருப்பவரின் தேவையை,  கண்டுகொள்ளவும்,  அவர்களுக்கு பக்கபலமாக இருக்கவும் அவர்களை பாராட்டவும், ஊக்கமூட்டவும், இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகின்றார். இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டு வாழ்வை வளமானதாக மாற்றுவோம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...