இன்று திருக்காட்சி பெருவிழா
இன்று திருக்காட்சி பெருவிழாவைத் திருஅவையாக நாம் இணைந்து சிறப்பிக்கின்றோம். ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா நமக்கு கற்பிக்கின்ற பாடம், ஞானி என்பவன் அனைவரிடத்திலும் கற்பவன் என்பார்கள்.
இன்று மூன்று ஞானிகள் ஒரு சிறு குழந்தையை தேடி வருகிறார்கள். நாங்களெல்லாம் சமூகத்தில் பெரியவர்கள், மதிப்பு மிக்கவர்கள். நாங்கள் சென்று ஒருவரைக் கண்டு வணங்க வேண்டுமா? என்ற எண்ணத்தோடு மிதப்பில் இருந்திருக்கலாம் இவர்கள் ஒவ்வொருவருமே. ஆனால் அந்த மிதப்பில் இல்லை. தங்களை விட உயர்வான ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்று நம்புகிறார்கள். தாங்கள் கொண்டிருந்த பெயர், புகழ், பட்டம், என அனைத்தையும் புறம்தள்ளி, அடுத்தவரை பெரியவராக எண்ணக்கூடிய பண்பு தான் ஞானிகளுக்கு அவசியமான ஒன்றாகிறது. அந்தப் பண்பைத் தான் இன்றைய நாளில் இறைவன் திருக்காட்சி பெருவிழா வழியாக நமக்கு உணர்த்துகிறார்.
இன்று பட்டங்களையும் பதவிகளையும் பொருளையும் நாடிக் கொண்டிருக்கக்கூடிய நாம், அடுத்தவரை விட நம்மிடம் ஏதேனும் ஒன்று நிறைவாக இருந்தால், மிகுதியாக இருந்தால், நாமே பெரியவர்கள் என்று எண்ணக்கூடியவர்களுக்கு மத்தியில், ஞானிகளாக கருதப்பட்டவர்கள், தங்களைத் தாழ்த்தி பாலன் இயேசுவின் முன்னால் மண்டியிட்டு வணங்கினார்கள். அவர்களிடம் இருந்த தாழ்ச்சியை, அவர்களிடமிருந்த தன்னடக்கத்தை, நமது வாழ்வில் நாமும் சிரமேற்கொண்டு செல்ல இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக