ஒளிவிளக்காகிட...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இருளைப் பழிப்பதை விட ஒளியை ஏற்றுவது மேல் எனக் கூறுவார்கள். நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் ஆண்டவரது இறைவார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறோம். அதனை வாழ்வாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறோம். ஆனால் அதனை நாம் செயல்படுத்துகிறோமா? என்ற கேள்வி வரும்போது அங்குதான் தடுமாற்றமும் அமைதியும் நிலவுகிறது.
ஆண்டவரின் வார்த்தைகள் வெறும் கேட்பதற்கானது மட்டுமல்ல. அவை செயலாக்கப்படுத்தப்பட வேண்டியவை. ஏற்றப்பட்ட ஒரு விளக்கானது, விளக்குத் தண்டின் மேல் இருக்கும் போதுதான் அதன் பயனானது அனைவருக்கும் கிடைக்கும். மாறாக அதனைக் கொண்டு போய் ஒரு மரக்காலுக்கு அடியில் வைத்தால், அதன் ஒளியானது பலருக்கு கிடைக்காது. அது போலத்தான், ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அவை நமக்கோ அடுத்தவருக்கோ பயன் தராது. கேட்ட வார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக்கப்படுத்தப் படும் போது தான், நாம் இந்த சமூகத்தில் பலருக்கு ஒளி வீசக்கூடிய, ஏற்றப்பட்ட ஒரு ஒளியாக, அதுவும் விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட ஒரு ஒளியாக, நம்மால் இருக்க முடியும்.
நாம் இறைவார்த்தைகளைக் கேட்டு விட்டு நகர்ந்து விடாமல், கேட்ட இறைவார்த்தைகளை வாழ்வாக்கி, பலருக்கு ஒளி தரக்கூடிய விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட ஒளிவிளக்காகிட இறையருள் வேண்டுவோம்.
🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🎆🎆🎆🎆🎆
பதிலளிநீக்கு