புனித செபஸ்தியார் திருநாள்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே உங்கள் அனைவரையும் இன்றையநாள் கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கி.பி.257 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிறந்த செபஸ்தியாரின் திருநாளை சிறப்பிக்க திருஅவை இன்று நமக்கு அழைப்பு தருகிறது. இந்த நல்ல நாளில் செபஸ்தியாரின் நாமத்தை தங்கியிருக்கின்ற அனைவருக்கும் நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
பிரான்ஸ் நாட்டில் பிறந்தாலும் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வளர்ந்த இவர் உரோமை இராணுவத்தில் படைவீரராகச் சேர்ந்தவர் இவர். இராணுவத்தில் பொறுப்போடு செயல்பட்டு படைத்தளபதியாக உயர்த்தவர் இவர். இவருடைய காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வேதகலாபனைகள் அதிகமாக நடந்தன. ஒவ்வொருநாளும் கிறிஸ்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள், கொடுமைப்படுத்தப்பட்டார்கள், சித்ரவதை செய்யப்பட்டார்கள். இதனால் நிறைய கிறிஸ்தவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கையை துறந்து வாழத்தொடங்கினார்கள்.
நம்பிக்கையை துறந்த மக்களைத் தேடிச் சென்று , நம்பிக்கையில் உறுதிபடுத்தியவர் நம் புனித செபஸ்தியார் . பலரை கிறிஸ்துவுக்காக உயிர்துறக்கும் அளவிற்கு நம்பிக்கையூட்டியவர் இவர். ஆளும் அரசனை விட அஞ்ச வேண்டியது ஆண்டவர் ஒருவருக்கே என்பதை உணர்ந்தவராய் கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்திருந்து மறை சாட்சியாக மரித்தவர். பலரும் மறை சாட்சியாக மாறிட வழிகாட்டியவர். இந்த புனிதரை நினைவு கூறுகின்ற இந்த நல்ல நாளிலே நாமும் நம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் நிலைத்து இருந்து ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த ஒரு சீடத்துவ வாழ்வை வாழக்கூடியவர்களாய் அஞ்சா நெஞ்சத்தோடு இயேசுவின் நற்செய்தியை நமது வாழ்வாக்கிட இறை அருள் வேண்டி இணைந்து இந்த திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக