திங்கள், 10 ஜனவரி, 2022

அதிகாரம் எதற்கு? ...(11.01.2022)

 

அதிகாரம் எதற்கு?

இயேசுவில் அன்புக்குரியவர்களே!





    இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுகிறிஸ்து அதிகாரத்தோடு பேய்களை ஓட்டுகிறார். அதிகாரம் என்பது யாருடைய கையில் இருக்கிறதோ அவர்கள் உயர்ந்தவராக கருதப்படுகின்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் அதிகாரங்களைக் கொண்டு எத்தகைய பணிகளை அவர்கள் முன்னெடுக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு, நாம் நமது அதிகாரத்திற்கு தகுதியான நபர்களிடம் அதிகாரத்தை வழங்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.


    இயேசுவினிடத்தில் இருந்த அதிகாரம் தீய ஆவிகளை மக்களிடம் இருந்து விரட்டியது.  ஆனால் இன்று நம்மிடம் இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி நாம் இந்த சமூகத்தில் எத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்கிறோம்? ஆண்டவர் இயேசுவை போல நல்லதை செய்கின்றோமா? அல்லது தன்னலத்தை முன் நிறுத்திய சுயநலப் போக்கோடு அதிகாரத்தைக் கொண்டு அடுத்தவர்களை அடக்கி ஆள எண்ணுகிறோமோ? சிந்தித்து பார்க்க இறைவன் அழைக்கின்றார்.


    இயேசு அதிகாரத்தை பயன்படுத்திய போது அதைக் கண்டு வியந்து போன மக்கள்,  இயேசுவிடமிருந்த அதிகார போதனையை கண்டு வியந்து போனது போல, நாம் வாழும் இந்த சமூகத்தில் அதிகாரத்தை நமக்குத் தந்த சராசரி மக்களும் நம்மை கண்டு வியந்து போகக் கூடிய வகையில்  நமது அதிகாரத்தைக் கொண்டு நமது பணியானது, நலமான நல்ல பணியாக அமைந்திட இறையருளை வேண்டுவோம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...