புதன், 5 ஜனவரி, 2022

இறைவார்த்தை என்றும் வழிகாட்டும் ... (6.01.2022)

 இறைவார்த்தை என்றும் வழிகாட்டும் 



    ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய கடமைகளை இச்சமூகத்தில் சிறப்பாகச் செய்தவர்.  எனவே தான் அவர் ஓய்வு நாள்களில் தொழுகை கூடத்திற்குச் சென்று அங்கு செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  அந்த அடிப்படையில் தான் இன்றைய நாளிலும் அவர் தொழுகை கூடத்திற்கு சென்றதையும்,  அங்கு ஏசாயாவின்  சுருளேட்டை எடுத்து அவர் வாசித்ததையும் நாம் வாசிக்க கேட்கின்றோம்.


    நமது வாழ்வில் நாம் நமது கடமைகளை இந்த சமூகத்தில் சரிவர செய்து கொண்டிருக்கின்றோமா? என்ற கேள்வியை இன்று நமது உள்ளத்தில்  எழுப்பி பார்க்க கடமைப்பட்டிருக்கின்றோம். மேலும் இயேசுவின் பணி என்ன என்பதை இறைவார்த்தை அவருக்கு எடுத்துக் காட்டியது. அந்த இறைவார்த்தையின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடிய நபராக இயேசு மாறினார்.

வாசிக்கப்படுகின்றன வார்த்தைகள் நம்மால் உணரப்படாத வரை அது நமது வாழ்வாக மாறுவது இல்லை ...
    இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நம்மில் எத்தனை நபர்கள் விவிலியத்தை அனுதினமும் வாசிக்கின்றோம்? என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம். நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்த விவிலியத்தில் இருக்கின்றன.  இந்த விவிலியத்தில் இருக்கக்கூடிய வார்த்தைகளுக்கு ஏற்றவகையில், இயேசுவைப் போல நாமும் நமது பணி என்ன என்பதைக் கண்டு கொண்டு உணர்ந்துகொண்டு , அதனை வாழ்வாக்க இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...