பவுலின் மனமாற்றப் பெருவிழா
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
இன்று நாம் பவுலின் மனமாற்றப் பெருவிழாவை கொண்டாடுகிறோம். இந்த நல்ல நாளில் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு பயணிக்க அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்பிக்கையோடு பயணிக்க நமக்கு அழைப்பு தருகின்றார்.
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர். என்ற வார்த்தைகளை வாழ்வாக்கியவர் பவுல்.
நம்பிக்கையோடு பயணிக்கும் போது நாம் மகத்துவமான பல பணிகளை செய்ய முடியும் என்பதை எடுத்துரைக்கிறது பவுலின் வாழ்வு. பவுலும் ஆண்டவர் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மனிதனாக மாறியதற்கு பிறகு, பலவிதமான அரும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார். குறிப்பாக, கடவுளை அறியாத புறவினத்தாரை தேடிச்சென்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார்.
நாமும் அவரைப் போல, நற்செய்தியை நம்பக்கூடிய நல்ல பணியாளர்களாக மாறுவோம். ஆண்டவர் இயேசுவைப் பற்றிய செய்தியை அகிலத்தில் உள்ள அனைவரிடத்திலும் அறிக்கையிட, இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக