ஒளி வீசுவோம்....
ஒருவரை ஒருவர் செதுக்கிக் கொள்வதே இந்த உலகில் வாழ்க்கை ஆகிவிட்டது.
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
உங்கள் அனைவரையும் இன்றைய கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஊரும் சதமல்ல!
உற்றார் சதமல்ல!
உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல!
பெண்டீர் சதமல்ல! பிள்ளைகளும் சீரும் சதமல்ல! தேசத்திலே யாரும் சதமல்ல! நின்தாள் சதம்! கச்சியேகம்பனே!
ஊரும் நிரந்தரமல்ல! உறவினர் நிரந்தரமல்ல! பேரும் புகழும் நிரந்தரமல்ல! செல்வமும் நிரந்தரமல்ல!
ஒன்றே ஒன்று மட்டுமே
நிரந்தரம்!
இறைவா! அது நீ ஒருவனே! என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகளுக்கேற்ப இன்றைய நாளில், அந்த இறைவனை பின்தொடர கூடிய, உண்மை சீடர்களாக வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்! என இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவின் அழைப்புக்கு செவிகொடுத்தவர்களாய், நம்மை நாமே செதுக்கிக் கொண்டு பயணிக்கும் போது, கடவுளின் மாட்சியில் சுடரொளியாக விளங்குவோம் என, இன்றைய முதல் வாசகம் வழியாக நமக்கு சுட்டிக் காட்டப்படுகிறது. நாம் கடவுளின் மாட்சியில் சுடரொளியாகிட, மனம் மாறி நற்செய்தியை நம்பக் கூடியவர்களாய், இயேசுவின் உண்மைச் சீடர்களாய், அவரின் பின்னே அவர் காட்டிய பாதையில் அவரைப் பின் தொடர்ந்து பயணிக்க கூடியவர்களாய் இருக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
வாழும் ஞானிகள் செய்வதெல்லாம் சேவையை என்பார்கள். நாமும் நமது சேவைகளால் நாம் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்பதையும் நற்செய்தியின் வழி வாழக் கூடியவர்கள் என்பதையும் இவ்வுலகிற்கு பறைசாற்றும் வகையில் நமது வாழ்வை இயேசுவின் வார்த்தைகளின் படி அமைத்துக் கொண்டு அவரின் பாதையில் அவரைப் பின்தொடர்ந்து இந்நன்னாளில் நாமும் பயணித்து, இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய, நமது பங்களிப்பை வெளிப்படுத்தி, கடவுளின் ஆட்சியில் சுடரொளியாக ஒளி வீசுவோம்!
நம்மை நாம் செதுக்கிக் கொள்ள தயாராகும்போது ஆண்டவரின் அருள் நம்மை வழிநடத்துகிறது ஆண்டவரில் நாம் இணைகின்றோம். அவரின் அன்பு பிள்ளைகள் ஆகின்றோம் என்ற அருமையான கருத்துகளுக்காக அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! நன்றிகளும்!
பதிலளிநீக்கு