அன்புக்குரியவர்களே இன்று நாம் பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறறை சிறப்பிக்கின்றோம்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு வழியாக சுகத்தை விட்டு விட்டு கிறிஸ்துவை பின்தொடர நாம் அழைக்கப்படுகிறோம்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வாக்கியத்தை நாம் பலமுறை பலபேர் கூறக் கேட்டிருப்போம். ஏன் நாம் கூட அதனை பல முறை பயன்படுத்தி இருப்போம். மனிதர்களாய் பிறந்த நம் ஒவ்வொருவரின் வாழ்வும் ஒவ்வொரு நாளும் மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உட்படும் நாம் நமது மனதையும் மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும். நிலையானது என நாம் இவ்வுலகில் நம்பி கொண்டிருக்கக்கூடிய அற்ப சுகங்களை எல்லாம் இழக்கும் போதுதான் இறைவனில் நாம் சுகம் பெற முடியும்.
தன்னிடம் இருந்ததை எல்லாம் இழந்து விட்டு கடவுளை மட்டுமே நம்பி வந்த ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தையாக விளங்குகிறார்.
அது போலவே இன்றைய வாசகத்தில் தன்னிடமிருந்த பிழைப்புக்காக வைத்திருக்கக்கூடிய படகையும் வலையையும் விட்டுவிட்டு ஆண்டவரின் வார்த்தைக்கு செவி கொடுத்து தங்கள் சுகங்களை எல்லாம் தியாகம் செய்துவிட்டு ஆண்டவரை பின்தொடர்ந்து இறையாட்சியின் சுகத்தை இவ்வுலகத்திற்கு வழங்குவதற்கு தங்கள் சுகங்களை தியாகம் செய்து சீடர்கள் இயேசுவோடு சென்றார்கள்.
இன்று பயிற்சிக் காலத்திலேயே நாம் சுகம் என கருதி கொண்டு இருப்பவைகளை எல்லாம் இறைவனுக்காக இழக்கும்போது தான். இறைவன் தரும் சுகத்தினை அனுபவிக்க முடியும். எனவே இறைவனோடு இணைந்து சுகம் காணவும், நம் அற்ப சுகங்களை தியாகம் செய்தவர்களாய் இறைவன் தரும் சுகத்தினை அனுபவிக்க கூடியவர்களாய் வாழ இணைந்து இறை அருளை வேண்டி இந்த திருப்பலியில் ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக