எது இறை திருவுளம்?
விடிந்தால் நமது நாடு குடியரசு பெற்று 71 ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த 71 ஆண்டுகளில் சட்டத்தின் பெயரால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? அல்லது சட்டத்தால் மக்கள் நசுக்கப்படுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பும் போது, இன்று நடந்து கொண்டிருக்கக் கூடிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மக்களின் போராட்டம் தான் நினைவுக்கு வருகிறது. சட்டம் என்பது மனிதனை நல்வழிப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று சட்டங்கள் மனித வாழ்வை அழிக்க கூடியதாக மாறிக்கொண்டே வருகிறது. சட்டங்கள் அனைத்துமே மறு ஆய்வு செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் மறு ஆய்வு செய்கின்றேன் என்ற பெயரில் சட்டத்தால் மக்களை நசுக்கும் சூழல் இன்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் 71 ஆண்டுகளை நிறைவு செய்து நாம் இன்று நமது நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். இந்த வேளையில் இன்றைய நற்செய்தி வாசகமும் இன்றைய முதல் வாசகமும் இறை திருவுளத்தை நிறைவேற்ற நமக்கு அழைப்பு தருகின்றன. இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவது மட்டுமே நம் ஒவ்வொருவரின் பணி. சட்டங்கள் அனைத்தும் இறைவனது திருவுளத்தை நிறைவேற்றக் கூடிய வகையில் அமைந்திட வேண்டும். ஆனால் இன்று சட்டங்கள் மக்களை நசுக்குகின்றன. இந்த கடுமையான சட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, சட்டம் அது மனிதனுக்காகத் தான் ; சட்டத்திற்காக மனிதன் அல்ல என்பதை உணர்ந்தவர்களாய் அன்று சட்டத்தால் அடிமைப்பட்ட மக்களுக்காக இயேசு குரல் கொடுத்தது போல, நாம் இன்று வாழக்கூடிய இச்சமூகத்தில் சட்டங்களால் நசுக்கப்படக் கூடியவர்களுக்கு துணை நிற்க இறையருளை வேண்டுவோம். இதுவே இறைவனின் திருவுளம். இந்த திருவுளத்தை நிறைவேற்றக் கூடிய நல்ல மனிதர்களாக நாம் உருவாகிட இறை அருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம் இந்த திருப்பலியில்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...
விவசாயிகளின் வாழ்வு மதிக்கப்பட, கடவுள் கொடுத்த வாழ்வை அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட, இன்றைய நாளில் விவசாயிகளுக்காக அவர்களின் போராட்டங்களுக்கு இறைவன் பதில் கொடுத்திட விவசாயிகளின் வாழ்வு பாதுகாக்கப்பட சிறப்பாக ஜெபிப்போம்!
பதிலளிநீக்கு