இயற்கையை பாதுகாப்பது - நமது கடமை...
சுற்றுவதில் *புவி* அழகானது.......!!!
சுடுவதில் *சூரியன்*அழகானது.......!!!
வளர்வதில் *பிறை* அழகானது.......!!!
மின்னுவதில் *விண்மீன்* அழகானது........!!!
தவழ்வதில் *குழந்தை* அழகானது........!!!
குதிப்பதில் *கடல்* நீர் அழகானது......!!!
விழுவதில் *அருவி* அழகானது..........!!!
எரிவதில் *தீபம்*
அழகானது...!!!
உறைவதில் *பனி* அழகானது........!!!
விளைவதில் *பயிர்கள்* அழகானது.......!!!
தலை சாய்ப்பதில் *நெற்கதிர்*அழகானது......!!!
குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது........!!!
உழைப்பதில் *வியர்வை* அழகானது.......!!!
பாடுவதில் *குயில்* அழகானது.........!!!
பறப்பதில் *புறா* அழகானது........!!!
உறவினில் *நட்பு* அழகானது........!!!
மொழிகளில் *மழலை* மொழி அழகானது.......!!!
மலர்களில் *ரோஜா*
அழகானது......!!!
மலர் வாசனையில் *மல்லிகை* அழகானது....!!!
கலர்களில் *கருப்பு*
அழகானது.....!!!
கலாச்சாரத்தில் *நம் நாடு* அழகானது...!!!
எப்போதும் *தாய்மை* அழகானது........!!!
இதனை உணர்ந்த அத்தனை *உள்ளங்களும்* அழகானது.....!!!
இந்த அழகான உள்ளங்களுக்கு இன்றைய முதல் வாசகத்தின் வழியாக இறைவன் இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதனை நமக்கு எடுத்துரைக்கிறார். இந்த அழகான உலகை படைத்த இறைவன், இதனை மனிதனுக்கு கீழ் உட்படுத்தினார். கடவுள் நம்மிடம் கொடுத்த இயற்கையை பேணி பாதுகாக்காமல், அதனை தங்களின் சுயநலத்தால் அழிக்கக் கூடியவர்கள் இன்று அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள். இந்நிலை தொடர்ந்து கொண்டே சென்றால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்பது போல இறைவன் படைத்த ஒரு மனிதனுக்குள் தீய ஆவி குடிகொண்டிருந்தபோது அதிகாரத்தோடு அத்தீய ஆவியை அம்மனிதனிடமிருந்து விரட்டினார். அதுபோலவே, இறைவன் படைத்த இந்த அழகிய உலகை அழித்துக் கொண்டே இருப்போமாயின், கண்டிப்பாக இயற்கை சீற்றங்கள் போன்றவற்றின் வழியாக இறைவன் அதிகாரத்தோடு தான் படைத்த இயற்கையை மீட்டெடுக்கக் கூடியவராக இருப்பார். இயற்கைக்கு எதிரான இன்னல்களையும் அநீதிகளையும் கண்டிக்க கூடியவராக குரல் கொடுப்பார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை. இன்று திருஅவை கூட, இயற்கையை அழித்துக் கொண்டிருக்க கூடிய செயலை வன்மையாக கண்டிக்கிறது. இயற்கை, இவ்வுலகம், நாம் வாழும் வீடு என திருத்தந்தை இயற்கையினை பேணி பாதுகாப்பதற்கு நம் ஒவ்வொருவரையும் சுற்று மடல்கள் மூலம் அழைப்பு தருகின்றார். சமீபத்தில்கூட கிரேட்டா துன்பர்க் என்ற ஒரு சிறுமி, நாங்கள் வாழ வேண்டிய இந்த உலகத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும் என்று இயற்கை அழிவுகளை சுட்டிக்காட்டி, ஐநாவில் கேள்வியை எழுப்பியது, பலருடைய மனங்களையும் சிந்தித்துப் பார்க்கத் தூண்டியது.
இன்றைய வாசகங்கள் வழியாகவும் இறைவன் நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக இறைவன் நமக்குத் தந்த இந்த அழகிய பரிசான இந்த உலகத்தை, நாம் நமது சுயநலத்தால் வேரறுத்துக் கொண்டிருக்கக் கூடிய செயல்களை சிந்தித்துப் பார்த்து, அதனை நிறுத்தி, இறைவன் படைப்பின் சிகரமாக படைத்த மனித இனம், இம்மனித இனம் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த இயற்கையை, இறைவனின் படைப்பு அது அனைவருக்குமானது, தனிப்பட்ட நபருக்கு மட்டும் அல்ல என்பதை ஆழமாக உணர்ந்தவர்களாய், இறைவன் கொடுத்த அன்புப் பரிசன இந்த இயற்கையை பாதுகாக்கவும் பண்படுத்தவும், வளப்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடவும் இயற்கையை நேசித்த புனித பிரான்சிஸ் அசிசியாரைப் போல இயற்கையிடமிருந்து பல பாடங்களை கற்றுக் கொண்ட பல நாடுகளைப் போல நாமும் இறைவன் படைத்த இயற்கையின் துணையோடு தான் இம்மண்ணில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாய் இயற்கையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் இறையருளை வேண்டுவோம். தொடர்ந்து இயற்கைக்கு எதிராக நடக்கக்கூடிய அநீதிகளைத் தட்டிக் கேட்கவும், இயற்கையை பாதுகாக்கவும், முடிந்தால் நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய இடங்களில் பல விதமான மரங்களையும் செடிகளையும் வளர்க்கவும் சுதந்திரமாக திரியும் பார்வைகளுக்கு மொட்டை மாடியில் தண்ணீர் வைத்து உணவு அளிக்கவும் நமது சின்னஞ்சிறு செயல்களால் இயற்கையை பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட தொடர்ந்து இறையருளை வேண்டுவோம். இயற்கையை பாதுகாப்பதற்கான முயற்சியில் சிறு செயல்கள் வழியாக ஈடுபட உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
Super
பதிலளிநீக்குஅழகான கருத்துகளைத் தினமும் பதிவிட்டு எங்களது ஒவ்வொரு நாளையும் அழகாக்கி சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கும் நீங்களும் எமக்கு ஒரு அழகான பரிசு தான் சகோ..
பதிலளிநீக்குவாழ்த்துகள்.. 🙏👍
இயற்கை அழகானது மட்டுமல்ல. நமது உறவு வாழ்விற்கும் மிகவும் அவசியமானது. இந்த இயற்கையின் வழியாகவே இறைவன் நம்மோடு உறவாடும் சென்றார் என்பதை அழகாக விவரித்த அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! நன்றிகளும்!
பதிலளிநீக்கு