செவ்வாய், 12 ஜனவரி, 2021

பொங்கல் விழா கிறிஸ்தவ பாடல்கள்

பொங்கல் விழா கிறிஸ்தவ பாடல்கள்
வருகை 
ஆடிடுவோம் பாடிடுவோம் 
ஆனந்தமாய் கூடிடுவோம் ஆண்டவரின் வாசலிலே - நாம் 
பறைமுழக்கம் முழங்கிடுவோம் 
பரமனை நாம் வாழ்த்திடுவோம் 
பல்லாண்டு பூமியிலே - ஏய் 

தந்தானே தானே னன்னானே தானே 
தன்னானே தன்னானே னானே னன்னானே 

கொம்பூதி கொட்டடிப்போம் 
குனிஞ்சு நல்லா கும்மியடிப்போம்
கொலவை போட்டு பொங்கல் 
நாமும் பொங்கிடுவோம் - ஆமா - நம்மசாமி 
குறைகளெல்லாம் தீர்ப்பாரு
கொடைகளெல்லாம் கொடுப்பாரு 
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் 

சித்தாட கட்டிக்கிட்டு
சிலம்பாட்டம் ஆடிடுவோம் 
சித்தரச் சம்பா அரிசியிட்டு பொங்கிடுவோம் - 2 - ஆமா நம் மசாமி 
குறைகளெல்லாம்...


மன்னிப்பு 

தானானே தானே னன்னே தன்னன்னா தானே 
தானானே தானே னன்னே தன்னன்னா 

அன்னையும் தந்தையுமான தெய்வமே சாமி 
மனசுருகி வந்தோம் எங்கள பொறுத்துக்கங்க 

மதவெறி சாதிவெறி நுகர்வு வெறி எல்லாம் 
வேடிக்கைப் பார்த்து சும்மா நின்னோமே 

பரிவில்ல தெளிவில்ல துணிவுமில்ல நாங்க 
இறையரசுப் பாதையில் நடக்கல

மன்னிப்பு

தயவு செய்யனும் ( 2 ) தந்தையே சாமி
தப்புத் தண்டா நாங்க செஞ்சோம் பொறுத்துக்க சாமி 
இரக்கம் வைக்கணும் ( 2 ) இயேசுவே சாமி 
எங்களோடு குத்தங்கொற பொறுத்துக்க சாமி 
அன்பு வைக்கணும் ( 2 ) ஆவியே சாமி 
ஏழ பாவியோட குத்தங்கொற பொறுத்தக்க சாமி 


உன்னதங்களிலே....

நம்ம சாமி நல்ல சாமி 
அவரு பெருமை ஓங்கிடணும் 
கடவுள் நம்பி வாழும் மக்கள் 
குறைகள் எல்லாம் தீர்ந்திடணும் 

இஸ்ரயேலின் கடவுளவர் 
விடுதலையின் கடவுளவர் 
மக்களை விடுவிக்க வந்தவரை 
வாழ்த்தி வணங்கிப் போற்றுகிறோம் 

சமத்துவ தந்தையின் சரிநிகராய் 
சங்கடம் தீர்க்க பிறந்தவரே 
தூய ஆவியின் ஆற்றலோடு 
அடிமை அமைப்பை ஒழித்தாரே 

சாதிக் கொடுமைகள் ஒழிந்திடணும் 
சமநீதி என்றும் நிலைத்திடணும் 
எங்க வயிறு நிரம்பிடணும் 
எங்க குரலைக் கேட்டிடணும் 

தந்தையோடு மட்டுமல்ல 
எங்களோடும் வாழும் இயேசு 
விடுதலைக்காக இரத்த சிந்தி 
தூய மனிதனாய் மாறி விட்டார் 

நாங்களும் எங்க வாழ்க்கையாலே 
தூயோராக வாழ்ந்திடுவோம் 
உமது எண்ணங்கள் நிறைவேறவே 
வாழ்வில் உறுதி அளிக்கின்றோம் - ஆமா...


தியானம்

 தான னன்னே தன்னே னானே தனன னானனே -4 
ஏழை எங்கள மீட்க வந்த சாமியே 
நாங்க மனுசராக வாழ வழி சொல்லையா - 2 
உழைச்சி உழைச்சி தேய்ஞ்சி போனோம் நாங்கையா 
எங்க உழைப்புக்குதான் மதிப்பு எப்போ சொல்லையா 

மாதம் மும்மாரி நாட்டுல மழைப் பெய்ய வேணும் 
சேதம் இல்லாம ஊரு செழித்திட வேணும் - 2 
பாதம் தொட்டல்லவோ உன்னை பணிகிறோம் சாமி 
நாதமும் நீயே எங்க பாடலும் நீயே - 2 

ஆட்சி மாறி ஆட்சி வந்தும் நாட்டுல 
எங்க கஷ்டம் மட்டும் தீரலியே ஊருல -2 
அறை வயிறு நிரம்பலேயே உழைப்பில 
நாங்க படும்பாடு கொஞ்சமில்ல கணக்கில -2 

சனங்க எல்லாரும் ஊருல ஒண்ணு சேர வேணும் 
பிளவு இல்லாம நாங்க ஒண்ணு கூட வேணும் -2 
உலகம் பூராவும் நீதி நிலைக்கணும் சாமி 
நெலம மாறணும் எங்க வாழ்க்கை மலரணும் -2 


அல்லேலூயா 

தன்னே னன்னா ஏலேலோ ஏலே னானே னன்னா ஏலேலோ 
அல்லேலூயா ஏலேலோ ஏலே பாடிடுவோம் ஏலேலோ 
ஆண்டவர் வார்த்தை ஏலேலோ இப்போ கேட்டிடுவோம் ஏலேலோ 
மறை விளக்கமாய் ஏலேலோ ஏலே 
மறையுரையாம் ஏலேலோ  
மனசு வச்சு ஏலேலோ ஏலே கேட்டிடுவோம்  ஏலேலோ....

மன்றாட்டு 

எங்கள படைச்ச சாமி எங்க குறைய கேளும் 
ஏழ மக்க நாங்க ஏற்றம் பெற வேணும் - 2 

காணிக்கை 

எங்களை படைத்த சாமி 
ஏழையாய் வாழ்ந்த சாமி -2 . 
மூச்சுக் காற்றுக்காய் முகவரியிழந்து 
விடியலை விரும்பிடும் உணவில்லா முகங்கள் 
மனிதம் செத்த உலகிலே மனிதம் காக்க இழக்கிறோம் -2 
வருகிறோம் வறியோர் தருகிறோம் 

எங்க நிலமும் வறண்டு போச்சு 
படையல் வைக்க நெல்லுமில்ல -2 உன் படைப்பாம் தண்ணீரை - தனக்குத்தான் 
என்று தடுக்குறான் -2 
வழிகாட்டு சாமி 
எம் வறுமை தருகிறோம் -2 

மானம் காத்த எம் கரங்கள் 
தானம் வாங்குது கையேந்தி -2 
நாட்டின் மேன்மை உயர்த்தினோம் 
வீட்டில் உணவு இல்லையே - 2 
வழிகாட்டு சாமி .... 


தூயவர்....

தூயவர் சஞ்சனக்கர சன்னாரே சனக்கு சன்னா சன்னாரே -2 
சஞ்சனக்கர சஞ்சனக்கர சஞ்சனக்கர சன்னாரே - 2 
தூயவர் தூயவர் மூவுலகின் ஆண்டவர்
வானமும் பூமியும் மகிமையால் நிறைந்துள்ளன 
ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவர் 
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா - 2 

கிறிஸ்து கற்பித்த செபம் 

வானத்துல வாழுகிற பெத்தவரே சாமி - என் 
பேர் வெளங்க வேணும் சாமி விடுதலை வரவேணும் 
நீதியுள்ள ஆட்சி வேணும் பெத்தவரே சாமி உன் 
நேர்மையான ஆட்சி வேணும் உத்தமரே சாமி 
வானத்துல உமது சித்தம் கொடிபறப்பதுபோல இந்த 
பூமியிலும் உமது சித்தம் நடக்கவேணும் சாமி 
ஒத்துமையா ஒரு உலையில் சேர்ந்து தின்னும் சோறு 
நித்தம் நித்தம் கொடுக்கணுமே பெத்தவரே சாமி 
எங்களைத்தான் அடிச்சவங்களை மன்னிப்பது போல எங்களை நீ மன்னிக்கணும் பெத்தவரே சாமி 
கவலைமேல கவலை வந்து கழுத்தறுக்கும் போது 
அந்தக் கண்ணீரைத் துடைக்கணும் பெத்தவரே சாமி 
சேத்துக்குள்ள மடிந்தழியும் நாத்துபோல நாங்க 
பேய்ச் சோதனையில் விழுந்திடாமக் காத்திடனும் சாமி 

ஆம் ஆமென் ஆம் ஆமென் பெத்தவரே சாமி 
ஆம் ஆமென் ஆம் ஆமென் உத்தமரே சாமி

திருவிருந்து 

உணவாக வந்து எங்கள் உயிர்காக்கும் தெய்வமே 
பிறர் வாழ்வே எம்மை பலியாக்கவே 
உளம் வாருமே உந்தன் பலம் தாருமே -2 

பாலைவன பூமியிலும் தானே னன்னே 
பசியால வாடாம 
பாங்கோட காத்து வந்த சாமியல்லவா - 2 
ஆசையோட உன் வார்த்த தானே னன்னே 
கேட்க வந்த சனங்களெல்லாம் 
அப்பங்கள் பகிர்ந்துகொள்ள ஆசிதந்தவர் 


வேர்வ சிந்தி பாடுபட்டோம் தானே னன்னே 
வெந்த சோற காணாத 
வேதனையில் வாழும் மக்கள் ஏராளமே - 2 
சோர்வு நீங்கி இந்த மக்கள் தானே னன்னே 
சோகம் போக்கும் மருந்தாகி 
சேர்ந்து நிற்க துணிவு தரும் விருந்தாக வா 


உயர்ந்தவங்க தாழ்ந்தவங்க தானே னன்னே 
எழை பணக்காரரென்று தானே னன்னே 
வேறுபாட்டின் வேரறுக்கும் தெய்வ விருந்து -2 
உறவெல்லாம் உண்மையாகி தானே னன்னே 
நோசமெல்லாம் நெசமாகி தானே னன்னே 
உள்ளமெல்லாம் மகிழவேணும் பகை மறந்து


திருவிருந்து

வானவிட்டு மண்ணில் வந்த சாமியே
மனிதனாக மண்ணில் வந்த சாமியே 
ஏழ மக்கள் பசி தீர்க்கும் சாமியே 
உணவாக உன்ன தந்த சாமியே 

எங்க நெல மாற வேணும் 
உரிமையோடு வாழ வேணும் 
நீதி கெட்ட சமூதாயத்த தட்டி கேட்க துணிவும் தரணும் ( தன்னன்னானே....)
                  I
சொந்த மண்ணுல பொறந்தாலும் மதிப்பு இங்கு ஏதுமில்ல 
சாதி சமய சட்டத்தால வாழ இங்கு வகையுமில்ல 
இருக்க இங்க இடமுமில்ல , தெருவுல நடக்க வழியுமில்ல போக ஒரு வழியுமில்ல சுடுகாட்டுல இடமுமில்ல - 2 
நானும் இங்க உன்ன போல சாமியே 
தலைய சாய்க்க இடமே இல்ல சாமியே ( தன்னன்னானே.... )

                       II 
அயலானுக்கும் பகைவனுக்கும் அன்பு காட்ட சொன்னீங்க 
தொட்டு உதவி செஞ்சிபுட்டா தீட்டாக ஆயிடுதே 
தன்னத்தானே தாழ்த்த சொல்லி சிறியவனாக ஆக சொன்னீங்க 
சிறியவனா ஆக்கப்பட்டேன் காலடியில் மிதிக்கப்பட்டேன் - 2 
நானும் இங்க உன்னப்போல சாமியே 
சாட்டை எடுக்க துணிஞ்சிபுட்டேன் சாமியே - 2 ( தன்னன்னானே ....)


இறுதி பாடல்

பாசமான வாழ்க்கை வேண்டி பயணம் போகிறோம் 
அன்புப் பாதையில் வழித்துணையா நீ வரவேணும் 
நேசமாக வாழ்வதற்கு வழி தெரியலையே - 2 
இனி நீயிருந்தா வழி தெரியும் 
பயணம் செழிக்குமே 
எங்களோட பயணம் செழிக்குமே 3 

உயிர்த்துணையா நீ இருக்க மனசு தெளியுதே -2 ஆமா 
உயிர் செழிக்க உரிய வழி நீ காட்டுமே 
ஐயா நீ காட்டுமே 
தனை அழிச்சு வாழ்வு தந்தா பூமி செழிக்குமே - அத 
தினந்தினமும் வாழ்வதற்கு சக்தி வேணுமே - 2 
ஐயா சக்தி வேணுமே 
சக்தி வேணுமே எங்களுக்கு சக்தி வேணுமே 
உனைத் தொடர நினைக்கிறோம் உறுதி தாருமே 
உயிர் உள்ளவர உமக்காக வாழப்போறோமே -2 


நீயிருக்கும் உலகத்துல நீதி நிலைக்குமே -2 ஆமா 
நீதி இங்க எந்நாளும் செத்துப்பொழைக்குதே -2 ஆமா 
உனத்தெரிஞ்ச மனுசருக்கு நீதி தெரியுமே - அத 
உருப்படியா வாழ வைக்க வழிகாட்டுமே 
வழிகாட்டுமே ஐயா வழிகாட்டுமே 
வழிகாட்டுமே எங்களுக்கு வழிய காட்டுமே 
உனதாட்சி வளர வேணும் இந்த நாட்டுலே அதில
ஒண்ணாக நாங்களெல்லாம் சேரப்போறோமே -2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...