இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து நாம் புனித பிரான்சிஸ் சேவியருடைய திருநாளை கொண்டாட அழைக்கப்படுகிறோம்.
உலகெங்கும் சென்று படைப்பிற்கு எல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் சுமந்தவர்களாய், அதற்கு செயல் வடிவம் தருகிறவர்களாக, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை இயேசுவின் சீடர்கள் பல இடங்களுக்குச் சென்று அறிவித்தார்கள். இவர்களின் வழியாக இயேசுவை ஆழமாக அறிந்து கொண்ட பலரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை பல இடங்களுக்கு சென்று அறிவித்தார்கள். அப்படி வந்தவர்களுள் ஒருவர் தான் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்கள்.
இன்று அவருடைய நினைவு நாளை கொண்டாடுகின்ற இந்த நன்நேரத்தில் நாம், நாம் அறிந்த இயேசுவை எந்த அளவிற்கு அடுத்தவரிடம் அறிவிக்கின்றோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து அனுதினமும் ஆண்டவரின் வார்த்தைகளை அடுத்தவருக்கு அறிவித்து இயேசுவின் சீடர்களாக சான்று பகருகின்ற மனிதர்களாக, நாம் வாழ்வதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக