இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
நம்பிக்கையோடு ஆண்டவரின் வருகைக்காக காத்திருக்கக்கூடிய நாம், உள்ளத்தில் இருக்கின்ற எல்லாவிதமான கவலைகளையும் புறம் தள்ளியவர்களாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாடிச் செல்ல இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று கூறக்கூடிய ஆண்டவருடைய வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாக, நமது வாழ்வில் இருக்கின்ற எல்லாவிதமான இடர்பாடுகளையும் புறம் தள்ளியவர்களாக, கடவுள் மீது கொண்டிருக்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் நிமித்தமாக நாம் நமது வாழ்வில் சந்திக்கின்ற எல்லா இடர்பாடுகளையும் தடைகளையும் தகர்த்தெறிவதற்கான ஆற்றலை இந்த இறைவன் தர வல்லவர் என்பதை உணர்ந்தவர்களாக, இந்த ஆண்டவரை நோக்கி நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம். பிறக்கவிருக்கின்ற இறைவன் நமது உள்ளத்திலும் இல்லத்திலுமாக பிறந்து, நம்முடைய கவலைகளை நீக்கி நமக்கு மகிழ்ச்சியை தருவார் என்ற நம்பிக்கையோடு அவரின் வருகைக்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை
ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக