இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
மனித வாழ்வானது ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகருகின்ற ஒரு வாழ்வாக அமைய வேண்டும் என்பதன் அடிப்படையில், மனித வாழ்வு எப்படி இருக்க வேண்டும், எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதை அன்று இறைவாக்கினர் எசாயா இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைத்ததை இன்று நாம் நமக்கு ஏற்ற வகையில், முதல் வாசகமாக அதனை வாசிக்க கேட்கின்றோம்.
இந்த வாசகத்தின் அடிப்படையில், நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவருக்கு சான்று பகருகின்ற மனிதர்களாக, நாம் வாழ அழைக்கப்படுகின்றோம். இந்த மண்ணில் வாழ்ந்த போது திருமுழுக்கு யோவான் கடவுளுக்கு சான்று பகருகின்ற மனிதராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.
முப்பத்து மூன்று ஆண்டுகள் இந்த மண்ணில் பயணம் செய்த இயேசு கிறிஸ்து கூட, கடவுளின் திட்டத்திற்கு சான்று பகரும் வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.
இவர்களை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு நாளும் நம்பிக்கையில் வளரக்கூடிய நீங்களும் நானும், நமது வாழ்வை ஆண்டவருக்கு சான்று பகருகின்ற ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம். இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் ஆண்டவருக்கு சான்று பகருகின்றவர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் ஆண்டவர் இடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக