இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவரின் வருகைக்காக நம்மை நாமே ஆயத்தப்படுத்திக்கொள்ள அழைப்பு தருகின்ற இந்த திருவருகை காலத்தில், வழி தவறிப் போன ஆட்டை தேடி செல்லுகின்ற உவமை வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவரின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் நெறி பிறழ்ந்து இருக்கக்கூடிய வழி தவறி அலைகின்ற ஒவ்வொருவரையும் தேடிச் செல்லக்கூடியவராக இருக்கிறார் என்ற ஆழமான சிந்தனையினை இன்றைய வார்த்தை வழியாக நமக்கு வழங்குகிறார். இறைவன் நம்மை தேடி வருகின்றார்.
நமக்காக நம்ம மத்தியில் மனிதனாக பிறக்கவிருக்கின்ற இந்த ஆண்டவரை நாம் நம்மவராக மாற்றிக் கொள்ள, நம்மிடம் இருக்கின்ற தவறிய வாழ்வுகளை எல்லாம் சரி செய்து கொண்டு, தவறிய பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றால் அதை சரி செய்து கொண்டு மீண்டும் ஆண்டவருடைய பாதையில் அவருக்கு உகந்த மனிதர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார்.
இறைவனின் அழைப்பிற்கு செவி கொடுத்து நமது வாழ்வை நெறிப்படுத்துகிற போது நமது வாழ்வை குறித்து கடவுள் மகிழக்கூடியவராக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாக வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரின் பாதையில் அனுதினமும் பயணம் செய்ய ஆண்டவரிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக