இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது, ஏரோது அரசனிடம் இருந்து இந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக வானதூதர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குழந்தையை எடுத்துக்கொண்டு அதன் தாய் மரியாவும் யோசேப்பும் எகிப்திற்கு ஓடிச் செல்வதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்கிறோம்.
கடவுளின் உடனிருப்பும் பராமரிப்பும் எப்போதும் நம்மைப் பின்தொடருகிறது என்பதை இந்த நிகழ்வு வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். மண்ணில் நாம் உதயமான நாள் முதல், இந்த நொடிப் பொழுது வரை கடவுள் எத்தனையோ நபர்கள் வழியாக நம்மை பாதுகாத்து, பராமரித்து வழி நடத்தி இருக்கிறார். இந்த கடவுளின் இந்த கிருபையை எண்ணிப் பார்த்தவர்களாக, எப்போதும் நம்முடன் பயணிக்கின்ற இந்த கடவுளை நாம் உணரத் தவறிப் போனாலும் கூட அவர் நம்மை மறந்து விடாத நபராக, ஒவ்வொரு நாளும் இன்பத்திலும், துன்பத்திலுமாக உடனிருந்து வழி நடத்துகிறார். இந்த வழி நடத்துகின்ற கடவுளைக் கண்டு கொள்ளக் கூடியவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொள்ள இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக