இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
திருவருகை காலத்தின் இரண்டாம் வாரமான இந்த ஞாயிற்றுக்கிழமையில் அமைதி என்ற மெழுகு திரியை ஏற்றி நாம் இந்த நாளை துவங்குகின்றோம். ஆண்டவருடைய வருகையை ஆவலோடு எதிர் நோக்கி இருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த ஆண்டவரின் வருகைக்கு நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ள நாம் நல்லதொரு மனம் மாற்றத்தை பெற வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். திருமுழுக்கு யோவானின் பிறப்பு ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்வதற்கு என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.
இன்று ஆண்டவர் இயேசுவின் பிறப்புக்காக நம்மை நாமே ஆயத்தப்படுத்துகின்ற இந்த நல்ல நாளில் நாம் தவறிய வாழ்வுகளை நினைவு கூர்ந்து மனம் வருந்தி மனம் மாற்றம் பெற்றவர்களாக, அமைதியை இதயத்தில் மலர்வித்தவர்களாக ஆண்டவரின் வருகைக்கு நம்மை நாமே ஆயத்தப்படுத்திக்கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே அவரின் நாள் வருகிற போது, இந்த அகிலம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளுகிறோம். நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காண்பித்த இந்த இயேசுவை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் நமது செயல்களை சீர்தூக்கிப் பார்த்தவர்களாய், நல்லதொரு மனமாற்றம் அடைந்தவர்களாய், ஆண்டவரின் வருகைக்கும் இயேசுவின் பிறப்புக்கும் நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ள, இறை வார்த்தையின் வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் சுய ஆய்வு செய்து பார்த்தவர்களாய், நல்லதொரு மனமாற்றத்தை பெற்றவர்களாக, அமைதியை இந்த சமூகத்தில் மலர்விக்கின்ற இயேசுவின் சீடர்களாக நாம் மாறிட ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக