இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று நாம் தாய்த்திரு அவையோடு இணைந்து மாசில்லா குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறோம். ஏரோது அரசனுடைய அரண்மனைக்குச் சென்று ஆண்டவர் இயேசுவை நாங்கள் காண வந்திருக்கிறோம், மெசியா பிறந்திருக்கிறார் என்ற செய்தியை அறிந்து இங்கு வருகை தந்திருக்கிறோம் என்று சொல்லியபோது ஏரோது அரசன் கலங்கினான். தனக்கு எதிராக ஒரு அரசன் வந்து விட்டாரோ என்ற கலக்கமானது, அவரது உள்ளத்தில் நஞ்சை விதைத்தது.
அங்கிருந்த ஞானிகளை பார்த்து, நீங்கள் சென்று பாலன் இயேசுவை வணங்குங்கள். அவரைப் பற்றி எனக்கு தகவல் கொடுங்கள். நானும் அவரை வணங்குவேன் என்று நயவஞ்சகமாக கூறி அனுப்புகின்றான். இயேசுவை கண்ட ஞானிகள் இந்த இயேசுவின் இருப்பிடத்தைக் குறித்து ஏரோதுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காத சூழ்நிலையில் இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எல்லாம் கொல்லுவதற்கு ஆணை பிறப்பிக்கின்றான். அதன் அடிப்படையில், பல குழந்தைகள் தன் உயிரை இழந்தனர். இப்படி உயிரிழந்த குழந்தைகளை எல்லாம் நினைவு கூருவதற்காகவே, திரு அவை இந்த மாசில்லா குழந்தைகள் தினத்தை உருவாக்கியது.
ஆண்டவர் இயேசுவின் பிறப்புக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த இந்த மாசில்லா குழந்தைகளை நன்றியோடு நினைவு கூர்ந்து ஜெபிக்கின்ற இந்த நன் நாளிலே நாம் நமது குழந்தைகளுக்கான முன்னோடிகள் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக, நமது சொல்லாலும் செயலாலும் நம் குழந்தைகளுக்கு நல்லதொரு முன்மாதிரிகளாக நாம் திகழவும், நம்மைப் பார்த்து வளருகின்ற குழந்தைகள், நாளும் கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குபவர்களாகவும், இயேசுவைப் போல பெற்றோருக்கு பணிந்து சிறந்து விளங்கக் கூடிய, குழந்தைகளாக வளரவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக