இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
தாய்த்திரு அவையோடு இணைந்து அன்னை மரியா அமல உற்பவி என்ற பெருவிழாவை கொண்டாட நாம் ஒவ்வொருவரும் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். மரியா பிறப்பிலிருந்தே ஜென்ம பாவம் இல்லாமல் பிறந்தார் என்பதை வலியுறுத்தும் வண்ணமாக, திருத்தந்தை ஒன்பதாம் பத்தி நாதர், மரியா அமல உற்பவி என அறிவித்தார். இவரின் வார்த்தைகளுக்கு வடிவம் தருகின்ற விதத்தில் லூர்து நகரில் அன்னை மரியா பெர்னதத் என்ற சிறுமிக்கு காட்சி கொடுத்து, நாமே அமல உற்பவம் எனக் கூறினார். இதன் அடிப்படையில் இப்பெருவிழாவானது திரு அவையில் மலர்ந்து வேரூன்றத் தொடங்கியது. இந்த திருவிழா நாட்களில் நாம் அன்னை மரியாவை குறித்து சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
ஆண்டவருக்காக அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, ஆண்டவருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து அவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்தித்து, அதன் அடிப்படையில் தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்ட இந்த அன்னை மரியாவைப் போல நாமும் நமது வாழ்வில் இருக்க அழைக்கப்படுகிறோம்.
இயேசுவை வயிற்றில் சுமப்பதற்கு திருவுளம் கொண்ட இந்த மரியாவை இறைவன் பாவ நிலையிலிருந்து காத்தது போல, நம்மையும் பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளில் இருந்து காக்க வல்லவர் இந்த இறைவன் என்பதை உணர்ந்தவர்களாக, கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நாம் வாழ அன்னை மரியின் துணையோடு அனுதினமும் பயணிக்க ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
அவரின் வருகைக்கு நம்மைக ஆயத்தமாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை
ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக