இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடி கொண்டார், என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நம்மோடு இருப்பதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனித வடிவம் எடுத்து நம்மிடம் வந்தார். நம்மோடு வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை, தன் வார்த்தைகளாலும் செயலாலும் வெளிக்காட்டினார். இந்த இயேசுவை உணர்ந்திருக்கின்ற நாம்
ஒவ்வொரு நாளும் இறை வார்த்தைகளின் வழியாக இந்த இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
வார்த்தையான இறைவன் தன் வார்த்தைகள் வழியாக நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் நெறிப்படுத்துகிறார். இந்த இறைவன் மீதான ஆழமான நம்பிக்கையில் அவரது வார்த்தைகளை நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து, நம்மை நாமே சரி செய்து கொண்டு, கடவுளின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக