இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
நம்பிக்கையோடு முடக்குவாதமுற்ற ஒரு மனிதனை நான்கு நபர்கள் இணைந்து சுமந்து கொண்டவர்களாய் இயேசுவின் முன்னிலையில் கொண்டு வர முயலுகிறார்கள். கூட்டம் மிகுதியாக இருக்கின்ற காரணத்தினால் கூரையை பிரித்து இயேசுவின் முன்பாக அவரை இறக்குகிறார்கள். இவர்களின் நம்பிக்கையை கண்ட இறைவன் வியந்து போனவராக அங்கு இருப்பவர்களுடைய மனநிலை பலவேறு பட்டதாக இருந்தாலும், கடவுள் இந்த முடக்குவாதமுற்றவரை சுமந்து கொண்டு வந்தவரின் நம்பிக்கை நிமித்தமாக அந்த முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறி, அவருக்கு நலம் தருகின்ற நிகழ்வை நற்செய்தி வாசகமாக வாசிக்க கேட்டோம்.
நம்பிக்கையோடு ஆண்டவரை நாடுகின்ற போது, பல்வேறு நலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு இந்த வல்ல செயல் ஒரு முன் உதாரணமாக அமைகிறது. நாம் நம்பிக்கையோடு ஆண்டவரை எதிர்கொள்ளவும், அவரது பிறப்புக்காக நம்மை நாமே ஆயத்தமாக்கிக் கொள்ளவும், அழைக்கப்படுகின்ற இந்த காலகட்டத்தில் ஆண்டவர் மீதான நம்பிக்கையில் இன்னும் ஆழப்பட்டவர்களாக நம்பிக்கையோடு அவரை நாடி சென்று பலவிதமான நன்மைகளை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள ஆற்றல் வேண்டி ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக