பகுதி - 1
கத்தோலிக்க திரு அவையின் அடிப்படை மறைக்கல்வி
I. மனித வாழ்க்கையும் கடவுளும் மனிதர் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றனர் உண்மையான மகிழ்ச்சியைத் தருபவரும் அதற்கு ஊற்ற இருப்பவரும் கடவுளே. எனவே, கடவுளை அடைவதில் தான் மனிதர் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.1. கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்?
கடவுளை அறிந்து, அவரை அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம்.
2. கடவுளை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
கடவுள் தாம் படைத்த பொருள்கள் வழியாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். அவற்றைப் பார்த்து, படைத்தவரை நாம் அறிந்து கொள்ள முடியும். சிறப்பாக, இறைவெளிப்பாடு வழியாகவும் அவரை அறிந்து கொள்ளலாம்.
3. கடவுளை நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
கடவுள் நம்மைப் படைத்துக் காத்துவரும் தந்தை: நாம் அவருடைய பிள்ளைகள். ஆகவே நாம் அவரை அன்பு செய்ய வேண்டும்.
4. கடவுளை நாம் எவ்வாறு அன்பு செய்ய முடியும்?
கடவுளின் விருப்பப்படி வாழ்வதன் வழியாக நாம் அவரை அன்பு செய்ய முடியும்.
5. கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன?
தாம் அளித்த கட்டளைகளுக்கும், நம் மனச்சான்றுக்கும் ஏற்ப நாம் வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்.
6. எல்லா மனிதரையும் நாம் என் அன்பு செய்ய வேண்டும்?
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்: இதனால் நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள். ஆகவே நாம் எல்லா மனிதரையும் அன்பு செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக