சனி, 25 ஜூலை, 2020

பகுதி: 10 அன்னை மரியா






பகுதி: 10 
அன்னை மரியா
அளவில்லாக் கருணையும் ஞானமும் உள்ள கடவுள் உலகை மீட்க ஆவல் கொண்டுஇ தம் மகனை உலகிற்கு அனுப்பினார். இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். தூய ஆவியால் கன்னி மரியாவிடம் மனிதரானார். நம்பிக்கைக் கொண்டோர் நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும் எப்பொழுதும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு சிறப்பான வணக்கம் செலுத்துகின்றனர்.

127. அன்னை மரியாவைப் பற்றிய நம்பிக்கை கோட்பாடுகள் யாவை? 
1 புனித மரியா கடவுளின் தாய்.
2. புனித மரியா எப்பொழுதும் கன்னி.
3. புனித மரியா அமல உற்பவி.
4. புனித மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்பு அடைந்தவர்.

128. செபமாலையின் மறை உண்மைகள் யாவை? 
1. மகிழ்வின் மறை உண்மைகள்
2. ஒளியின் மறை உண்மைகள்
3. துயரின் மறை உண்மைகள்
4. மாட்சியின் மறை உண்மைகள்

129. மகிழ்வின் மறை உண்மைகள் யாவை? 
1 கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூது உரைத்தது.
2. இறை அன்னை எலிசபெத்தைச் சந்தித்தது.
3. இயேசு பெத்லகேமில் பிறந்தது.
4. இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
5. காணாமல் போன இயேசுவைக் கோவிலில் கண்டடைந்தது.

130. ஒளியின் மறை உண்மைகள் யாவை? 
1 இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றது.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீ ரைத் திராட்சை இரசமாக மாற்றியது.
3. இயேசு இறையரசைப் போதித்தது.
4. இயேசு தாபோர் மலையில் தோற்றம் மாறியது.
5. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது.

131. துயரின் மறை உண்மைகள் யாவை? 
1 இயேசு இரத்த வியர்வை சிந்தியது.
2. இயேசு கல்தூணில் கட்டுண்டு அடிபட்டது.
3. இயேசு முள்முடி சூட்டப்பட்டது.
4. இயேசு கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து சென்றது.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டுத் தம் உயிரைத் துறந்தது.

132. மாட்சியின் மறை உண்மைகள் யாவை? 
1. இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது.
2. இயேசு விண்ண கம் சென்றது.
3. அன்னை மரியா மீதும் திருத்தூதர்கள் மீதும் தூய ஆவியார் எழுந்தருளி வந்தது.
4. இறை அன்னை விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
5. இறை அன்னை விண்ணக, மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...