இயேசுவின் சகோதரர்களாவோம்...
அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...
"என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?"
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு கேள்விகளும் அன்னை மரியாவை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது போல தோன்றுகிறது ...
ஆனால் உண்மையை அறிந்தாக வேண்டும். கேள்வியோடு நின்றுவிடாமல் இயேசுவின் அடுத்த வரிகளை நாம் வாசித்து பார்க்க வேண்டும்.
"விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்" என இயேசு குறிப்பிடுகிறார் ...
விண்ணகத்தில் உள்ள தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவை இயேசுவை வயிற்றில் கரு தாங்க வேண்டும் எனக் கேட்டபோது "நான் ஆண்டவரின் அடிமை" எனக்கூறி விண்ணிலுள்ள தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியவர் இந்த அன்னைமரியா ...
"ஆண்டவர் இயேசு கிறிஸ்து என் தாயும் சகோதரர்களும் என தன் சீடர்களை நோக்கி கையை நீட்டுகிறார்" என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணலாம்.
விண்ணிலுள்ள தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற கூடியவர்களாக நாம் செயல்படும்போது அன்று இயேசு சீடர்களை நோக்கி கை நீட்டியது போல நம்மையும் கைநீட்டி சொல்லுவார் என் சகோதரர்கள் என்று...
இயேசுவின் சகோதரர்களாக நாம் மாற வேண்டுமாயின் விண்ணில் உள்ள தந்தையின் விருப்பமான அன்பு, நீதி, கருணை போன்றவற்றை நமது வாழ்வில் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு நாம் செயல்படுத்தும்போது விண்ணிலுள்ள தந்தையின் திருவுளத்தை நாம் நிறைவேற்றுவோம்...
விண்ணிலுள்ள தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் போது இயேசு நம்மையும் கைநீட்டி சொல்வார் நீங்கள் என் சகோதரர்கள் என்று....
இயேசுவின் சகோதரர்களாவோம்...
நான் ஆண்டவரின் அடிமை என்று கூறிய நம் அன்னை மரியாவை போன்று நாமும் ஆண்டவருக்கு மட்டுமே, அவரின் அன்புக்கும் அருளுக்கும் மட்டுமே, அடிமையாகிட, அவரின் உண்மையான சீடர்களாகிட நம்மையே அர்ப்பணிப்போம்.
பதிலளிநீக்குஉண்மையான சீடத்துவ வாழ்வின் வழியாக ஆண்டவர் இயேசுவின் சகோதர உறவில் நம்மையே நிலைப்படுத்துவோம்!
பதிலளிநீக்கு