பகுதி : 3
இயேசு கிறிஸ்து உலக மீட்பர்
கடவுளுக்குக் கீழ்ப்படியாத முதல் பெற்றோராக குற்றத்தைத் தொடர்ந்து மனிதர் மேன்மேலும் பாவத்தில் மூழ்கினர். இருப்பினும் கடவுள் உலகின் மீது இரக்கம் கொண்டார். தமக்கும் மனிதருக்கும் இடையே நட்பையும் உறவையும் ஏற்படுத்த இஸ்ரயேல் மக்களின் தந்தையான ஆபிரகாம் வழியாக உடன்படிக்கை செய்து கொண்டார். எகிப்து நாட்டில் அடிமைகளாய் இருந்த இஸ்ரயேல் மக்களை மோசே தலைமையில் மீட்டுஇ சீனாய் மலையில் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். வாக்களிக்கப் பெற்ற கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுத்தார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற இஸ்ரயேல் மக்களோ இந்த உடன்படிக்கையைப் பல முறை மீறினார்கள்: கடவுளைப் புறக்கணித்தார்கள். எனினும் கடவுள் அவர்களைப் புறக்கணிக்கவில்லை மாறாகஇ இறைவாக்கினர்களை அனுப்பிஇ மீட்பரின் வருகையை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.எனவே இஸ்ரயேல் மக்கள் மற்றும் உலக மக்கள் அனைவருமே மீட்பராகிய இயேசுவின் வருகையை எதிர்நோக்கி இருந்தார்கள்.
18. கடவுள் வாக்களித்த மீட்பர் யார்?
இயேசு கிறிஸ்து.
19. இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்குப் பொருள் என்ன?
இயேசு என்பதற்கு மீட்பர் என்றும்இ கிறிஸ்து என்பதற்கு அருள்பொழிவு பெற்றவர் என்றும் பொருள் ஆகும்.
20. இயேசு எந்த நாட்டில் பிறந்தார்?
பாலஸ்தீன் என்னும் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தார்.
21. இயேசு எந்த ஊரில் பிறந்தார்?
பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்தார்.
22. இயேசுவின் தாய் யார்?
எப்பொழுதும் கன்னியான புனித மரியா.
23. இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்?
தூய ஆவியின் வல்லமையால் வியத்தகு முறையில் கருவாகிஇ இயேசு மனிதராகப் பிறந்தார்.
24. இயேசுவின் தந்தை யார்?
கடவுளே இயேசுவின் தந்தை. புனித யோசேப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே.
25. இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன?
1. இயேசு பிறந்த நாற்பதாம் நாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டார்.
2. நாசரேத்தில் வளர்ந்து வந்தார்.
3. தம் தாய் தந்தையருக்குப் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
4. தம் பன்னிரண்டாம் வயதில் போதகர் நடுவில் கற்பித்தார்.
5. ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்துஇ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
26. இயேசு திருமுழுக்குப் பெற்றாரா?
ஆம்இ தமது முப்பதாம் வயதில் திருமுழுக்குப் பெற்றார்.
27. யாரிடம் திருமுழுக்குப் பெற்றார்?
திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
28. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் என்ன நிகழ்ந்தது?
வானம் திறக்கஇ கடவுளின் ஆவியார் புறா வடிவில் இயேசு மீது இறங்கி வந்தார். அப்பொழுது என் அன்பார்ந்த மகன் நீயேஇ உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. இதன் பிறகு இயேசு தமது மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்கினார்.
29. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்கிறோம்?
கடவுள் ஒருவரே என்றும்இ அவர் தந்தைஇ மகன்இ தூய ஆறியார் என மூன்று ஆள்களாய் இருக்கிறார் என்றும் அரிந்து கொள்கிறோம். இந்த உண்மையையே மூவொரு கடவுளின் மறைபொருள் என்கிறோம்.
30. தந்தை கடவுளா?
ஆம்இ கடவுள் தான்.
31. மகன் கடவுளா?
ஆம்இ கடவுள் தான்.
32. தூய ஆவியார் கடவுளா?
ஆம்இ கடவுள் தான்.
33. இம் மூவரும் மூன்று கடவுளாஇ ஒரே கடவுளா?
ஒரே கடவுள்.
34. எப்படி ஒரே கடவுள்?
யாதொரு வேறுபாடும் இன்றி. மூவருக்கும் ஒரே அன்புறவுஇ ஒரே ஞானம்இ ஒரே திருவுளம்இ ஒரே வல்லமைஇ ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே.
35. இயேசு தம் மீட்புப் பணிக்குத் துணையாக யாரைத் தேர்ந்து கொண்டார்?
இயேசு தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்து கொண்டார். அவர்களைத் திருத்தூதர் என்றும் அழைத்தார்.
36. கடவுளின் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?
1 கடவுள் நம் அனைவரின் அன்புத் தந்தை: நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள்.
2. அனைத்திற்கும் மேலாக நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.
37. பிறர் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?
1. இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும்.
2. பகைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும்.
3. இயேசு நம்மை மன்னிப்பது போல நாமும் பிறரை மன்னித்து வாழ வேண்டும்.
38. தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்?
தம் அரும் அடையாளங்களாலும்இ போதனையாலும்இ பாவிகளை மன்னித்ததாலும்இ சிலுவைச் சாவையே ஏற்றதாலும் தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு வெளிப்படுத்தினார்.
39. இயேசு செய்த முக்கியமான அரும் அடையாளங்கள் யாவை?
1. தண்ணீ ரைத் திராட்சை இரசமாக மாற்றினார்.
2. அப்பம் பலுகச் செய்தார்.
3. புயலை அடக்கினார்இ; கடல் மீது நடந்தார்.
4. நோய்களைக் குணப்படுத்தினார்.
5. பேய்களை ஓட்டினார்.
6. இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார்.
7. தாம் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
40. இயேசு கிறிஸ்து யார்?
இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளும் மனிதரும் ஆனவர் ; பாவத்திலிருந்து நம்மை மீட்பவர். கடவுளுக்கும் காட்டுபவர். மனிதருக்கும் உள்ள உறவில் நிறைவாழ்வு காண நமக்கு வழி
41. இயேசு எவ்வாறு நம்மை மீட்டார்?
இயேசு தம் விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். நம் பாவங்களுக்காகப் பாடுபட்டுஇ சிலுவையில் இறந்தார். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்தார். இவ்வாறு நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தார்.
42. இயேசு நமக்காக அனுபவித்த முக்கியமான பாடுகள் யாவை?
1. யூதத்தலைவர்களால் எதிர்க்கப்பட்டார்.
2. கெத்சமனித்தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தினார்.
3. யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.
4. கல்தூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார்.
5. முள்முடி சூட்டப்பட்டார்.
6. சிலுவையில் அறையுண்டு வேதனைப்பட்டு அவலச் சாவுக்கு உள்ளானார்.
43. சிலுவைச் சாவோடு இயேசுவின் வாழ்வு முடிந்து விட்டதா?
இல்லை. இயேசு தாம் முன்னுரைத்தவாறு மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். உலக முடிவு வரை எந்நாளும் நம்முடன் இருக்கிறார்.
44. உயிர்த்த இயேசு விண்ணேற்றம் அடையும் வரை என்ன செய்தார்?
உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குப் பல முறை தோன்றி அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி வந்தார்.
45. இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்றால் என்ன?
இயேசு பாடுபட்டுஇ இறந்து உயிர்த்ததையே இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்கிறோம்.
46. கிறிஸ்துவினுடைய பாஸ்கா என்றால் என்ன?
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து தந்தையிடம் சென்றது போலஇ நாமும் பாவத்தை விட்டெழுந்துஇ அருள் வாழ்வுக்குக் கடந்து செல்ல வேண்டும். இதுவே கிறிஸ்துவருடைய பாஸ்கா.
47. இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்ற பத்தாம் நான் யாரை அனுப்பினார்?
தூய ஆவியாரை அனுப்பினார்.
48. இயேசு கிறிஸ்து இப்பொழுது எங்கே இருக்கிறார்?
இறைத்தந்தையுடன் ஒன்றுபட்டுஇ இயேசு கிறிஸ்து உலகம் எங்கும் இருக்கிறார். அருளடையாள முறையில் சிறப்பாக தூய்மைமிகு நற்கருணையில் இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக