செபம்: நீசே நம்பிக்கை அறிக்கை
ஒரே கடவுளை நம்புகின்றேன். விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த, எல்லாம் வல்ல தந்தை அவரே. கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் காலங்களுக்கு எல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக. உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காவும், நம் மீட்புக்காவும் விண்ணகம் இருந்து இறங்கினார். தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு. இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழ் விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றார். வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட மாட்சியுடன் மீண்டும் இருக்கின்றார். அவரது ஆட்சிக்கு முடிவு இராது. தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே. ஒரே. புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும் திரு அவையை நம்புகின்றேன். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக் கொள்கின்றேன். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக