சனி, 25 ஜூலை, 2020

செபம்: இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு






செபம்: இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு

மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்மிடம் அடைக்கலம் நாடி வந்துஇ ஆதரவைத் தேடி மன்றாடினோர் எவரையும் நீர் கைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேட்டதில்லை என்பதை நினைத்தருளும். கன்னியர்களுக்கு அரசியான கன்னியே. நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கை என்னைத் தூண்டுவதால் நான் உமது திருவடியை நாடி வருகிறேன். பாவியாகிய நான் உமது இரக்கத்திற்காகஇ துயரத்தோடு உம் திருமுன் காத்து நிற்கிறேன். மனிதராகப் பிறந்த வார்த்தையின் தாயேஇ என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கேட்டருளும்.

பிறப்பு நிலைப் பாவம் இன்றிக் கருவுற்ற புனித மரியே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஓடி வந்தோம். எங்கள் மீது இரக்கம் கொண்டுஇ எங்களுக்காக உம்முடைய திருமகனிடம் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...