சனி, 25 ஜூலை, 2020

பகுதி :4 தூய ஆவியார்


பகுதி :4
தூய ஆவியார்
தாம் இவ்வுலகில் ஆற்றிவந்த மீட்புப் பணி உலக முடிவு வரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கிறிஸ்து விரும்பினார். எனவே தமக்குப் பின் இப்பணி தொடர்ந்து நடைபெறத் தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தார். அதன்படி தாம் விண்ணகம் சென்ற பத்தாம் நாள் தூய ஆவியாரை அனுப்பினார். தூய ஆவியாரைப் பெற்றுக் கொண்ட திருத்தூதர்கள் அச்சம் இன்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தனர். அதற்குச் செவி கொடுத்த பல ஆயிரக்கணக்கான மக்கள் மனந்திரும்பித் திருமுழுக்குப் பெற்றார்கள். இவ்வாறு திரு அவை பிறந்து வளரத் தொடங்கியது.

49. தூய ஆவியார் யார்? 
தந்தையோடும் மகனோடும் ஒரே கடவுளாக ஒன்றுபட்டு இருக்கும் மூன்றாம் ஆள்.

50. தூய ஆவியார் திரு அவையில் எவ்விதம் செயலாற்றுகிறார்? 
உடலுக்கு உயிர் இருப்பதுபோல்இ தூய ஆவியார் திரு அவையில் இருந்து அதனை வழிநடத்துகிறார். அதைப் புனிதப்படுத்தி வளரச் செய்கிறார்.

51. நம் ஒவ்வொருவரிடத்திலும் தூய ஆவியார் என்ன செய்கிறார்? 
தூய ஆவியார் நம்முள் குடிகொண்டு நம்மைப் புனிதப்படுத்துகிறார். தந்தையோடும் மகனோடும் நம்மை இணைக்கிறார்.இறைவனின் பிள்ளைகளுக்கு உரிய அன்புறவுடனும் சுதந்திரத்துடனும் நாம் வாழ நமக்கு ஆற்றல் அளிக்கிறார்.

52. தூய ஆவியார் மீது நமக்குள்ள கடமை என்ன? 
தூய ஆவியாருடைய தூண்டுதல்களுக்குப் பணிந்து, அவர்மீது அன்பு கொண்டு, அவரது வழிநடத்துதலுக்கு ஏற்ப நாம் வாழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...